Suriya: ரோலக்ஸ், இரும்புக் கை மாயாவி, வாடிவாசல்... லோகேஷ் முடிவு என்ன..? சூர்யா கொடுத்த அப்டேட்ஸ்

ரோலக்ஸ், இரும்புக் கை மாயாவி படங்கள் குறித்து சூர்யா பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Oct 29, 2024 - 17:37
 0
Suriya: ரோலக்ஸ், இரும்புக் கை மாயாவி, வாடிவாசல்... லோகேஷ் முடிவு என்ன..? சூர்யா கொடுத்த அப்டேட்ஸ்
சூர்யா

சென்னை: சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படம், பீரியட் ஜானரில் உருவாகிறது. சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், நட்டி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் கங்குவா படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம், 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. இதனால் இந்தப் படத்துக்கு தரமான ப்ரோமோஷன் செய்யப்பட்டு வருகிறது. 

கங்குவா ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூர்யா, ரோலக்ஸ், இரும்புக் கை மாயாவி, வாடிவாசல் படங்கள் குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிமாறன் விடுதலை படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். அதனால் தான் வாடிவாசல் இன்னும் தொடங்கவில்லை என்றும், மற்றபடி ஜல்லிக்கட்டு காளையும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும் வாடிவாசல் படத்திற்காக ரெடியாக உள்ளனர். வெற்றிமாறன் வந்ததும் வாடிவாசல் உருவாகும் எனக் கூறினார்.

அதேபோல், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணைவது குறித்து பேசிய சூர்யா, ரோலக்ஸ், இரும்புக் கை மாயாவி என இரண்டு கதைகள் ரெடியாகவுள்ளன. இதில் இரும்புக் கை மாயாவி படத்தில் நான் நடிப்பேனா அல்லது வேறு ஏதேனும் பெரிய ஹீரோ கமிட்டாகியுள்ளாரா என்பது தெரியவில்லை. அதேநேரம் ரோலக்ஸ் படம் கண்டிப்பாக வரும் என்று நம்புகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் படங்கள் ஆகியவற்றில் லோகேஷ் கனகராஜ் பிஸியாக உள்ளார். அதனால் இப்போதைக்கு நாங்கள் இருவருமே ஃப்ரீயாக இல்லை, ஆனால் சீக்கிரமே இணைவோம் எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க திடீரென லோகேஷ் அழைத்தார். அந்த இரண்டு நிமிட காட்சியும் பாதி நாளில் ஷூட் செய்யப்பட்டது. முக்கியமாக இக்காட்சி பாதி நாளில் ஷூட் செய்யப்பட்டது. ஷூட்டிங் ஸ்பாட் சென்ற பின்னர் தான் லோகேஷ் கனகராஜ் ஸ்கிரிப்ட் பேப்பரை கொடுத்தார். அதேபோல் இப்படத்திற்காக சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் சினிமாவில் புகைப் பிடிக்கும் காட்சியியில் நடித்ததாக கூறியுள்ளார் சூர்யா.     

லோகேஷ் கனகராஜ்ஜின் ட்ரீம் ப்ராஜெக்ட்டான இரும்புக் கை மாயாவி, சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் என சொல்லப்படுகிறது. முதலில் சூர்யாவிடம் இந்த கதையை சொன்ன லோகேஷ், சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் இரும்புக் கை மாயாவி படத்தின் கதையை சொன்னதாக தெரிகிறது. இதனால் சூர்யாவுக்குப் பதிலாக அமீர்கான் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் ரஜினியின் கூலி படத்திலும் அமீர்கான் கேமியோவாக நடிக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow