சினிமா

Vettaiyan : “அதுக்கு தினேஷ் மாஸ்டர் தான் காரணம்..” வேட்டையன் ரிசல்ட் சொன்ன ரஜினி... ட்ரைலர் ரெடி!

Rajinikanth About Manasilayo Song : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக். 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ரிசல்ட் குறித்தும் மனசிலாயோ பாடலின் ஹிட் பற்றியும் ரஜினி பேசியது வைரலாகி வருகிறது.

Vettaiyan : “அதுக்கு தினேஷ் மாஸ்டர் தான் காரணம்..” வேட்டையன் ரிசல்ட் சொன்ன ரஜினி... ட்ரைலர் ரெடி!
வேட்டையன் ட்ரைலர் அப்டேட்

Rajinikanth About Manasilayo Song : தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில், மனசிலாயோ பாடலுக்கு அனிருத்துடன் இணைந்து டான்ஸ் ஆடி வைப் கொடுத்திருந்தார் சூப்பர் ஸ்டார். 

ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலுக்கு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரீலீஸ் வீடியோ வெளியிட்டு மாஸ் காட்டி வருகின்றனர். அதேபோல், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ரஜினி, அப்படக்குழுவினருடன் மனசிலாயோ பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்தார். இந்நிலையில், மனசிலாயோ பாடலின் வெற்றி குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “மனசிலாயோ பாடல் இவ்ளோ பெரிய ஹிட்டாக காரணமே தினேஷ் மாஸ்டரும் அனிருத்தும் தான். தினேஷ் மாஸ்டர் ரொம்ப சிம்பிளான ஸ்டெப்ஸ் வைத்து கோரியோகிராபி செய்திருந்தார்” என பாராட்டினார். 

அப்போது வேட்டையன் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது, ஆனால், சிலருக்கு மட்டும் பாஸ் இருந்தும் நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. அடுத்த முறை இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். அதேபோல், வேட்டையன் எப்படி இருக்கிறது, நீங்கள் பார்த்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “படம் நல்லா வந்துருக்கு, அக்டோபர் 10ம் தேதி ரிலீஸானதும் ரசிகர்கள் தான் படத்தின் ரிசல்ட் சொல்ல வேண்டும்” என்றார். 

தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வந்த ரஜினிக்கு, ஜெயிலர் தரமான கம்பேக் கொடுத்தது. ஆனால், அவர் கேமியோவாக நடித்த லால் சலாம் திரைப்படம் எதிர்பார்த்தளவுக்கு ஹிட்டாகவில்லை. இதனால் வேட்டையன் படத்துக்கு ரஜினி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், வேட்டையன் படத்தின் ட்ரைலர் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இசை வெளியீட்டு விழாவில் வேட்டையன் முன்னோட்ட காட்சியை மட்டும் படக்குழு ரிலீஸ் செய்திருந்தது. அதேபோல், வேட்டையன் படத்தின் ரன்னிங் டைம் குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி முதல் பாதி 1 மணி நேரம் 20 நிமிடங்களும், இரண்டாவது பாதி ஒரு மணி நேரம் 25 நிமிடங்களும் என, மொத்தம் 2.45 மணி நேரம் என்று சொல்லப்படுகிறது.