ஒரே நாளில் இரண்டு கொலை.. சென்னை கோடம்பாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்..

சென்னை கோடம்பாக்கத்தில் ஒரே நாளில் இரண்டு கொலை நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Aug 17, 2024 - 23:27
Aug 17, 2024 - 23:29
 0
ஒரே நாளில் இரண்டு கொலை.. சென்னை கோடம்பாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்..
கொலை செய்யப்பட்ட ஸ்டீபன் எட்வர்ட் மற்றும் கன்னியப்பன்

சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனி ஒன்றாவது தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன் (40). திருமணம் ஆகாத இவர் தனது உறவினர் அதிமுக நிர்வாகி நக்கீரன் என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கன்னியப்பன் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகே உள்ள காலி இடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். அதேபோல நேற்று இரவு மது குடிக்க சென்றவர் நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பாததால், அருகில் உள்ள நபர்கள் கண்ணியப்பனை தேடிய போது தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து கோடம்பாக்கம் போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்த கண்ணியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மது போதை தகராறில் கன்னியப்பன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது எதனை எடுத்து போலீசார் கொலையாளிகளை அங்குள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதே போல கோடம்பாக்கம் வரதராஜபேட்டை பகுதியில் மகன் தனது தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் வரதராஜபேட்டை மூப்பன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் எட்வர்ட் (56), இவர் பெயிண்டிங் வேலை செய்து கொண்டு, மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகன் சர்வின் அஜய்குமார் (24) என்பவருடன் பிளாட்பாரத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் உறங்கி கொண்டு இருந்த ஸ்டீபன் எட்வர்ட்டை, அவரது மகன் சர்வின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த ஸ்டீபனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பறிக்கப்பட்டு அவரது மகன் சர்வின் அஜய்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow