தமிழ்நாடு

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு: ”பவள விழாவுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுக்க முடிஞ்சுதா?” காவல்துறைக்கு குட்டு வைத்த நீதிமன்றம்

ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு காவல்துறைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.    

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு:  ”பவள விழாவுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுக்க முடிஞ்சுதா?” காவல்துறைக்கு குட்டு வைத்த நீதிமன்றம்

ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு போலீசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.    

தமிழ்நாடு முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. அதன்படி கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 43 இடங்களில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதே அணிவகுப்பை இந்த ஆண்டு 58 இடங்களில்  நடத்த  போலீசிடம் மனு கொடுத்திருந்தனர் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள்.ஆனால் இந்த விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

இதனால், விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்  செய்திருந்தது.

மொத்தம் 58 இடங்களில் அணி வகுப்பு நடத்த அனுமதி கோரப்ப்ட்ட நிலையில் 42 இடங்களில் அனுமதி. 16 இடங்களில் அனுமதி நிராகரிப்பு. ஒரு மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அணி வகுப்புக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருப்பதால் அனுமதி நிராகரிப்பு. 

இந்த விவகாரத்தில் அரசும் காவல்துறையும் , கண்ணாமூச்சி விளையாடுவதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பல இடங்களில் அற்ப காரணங்களைக் கூறி அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. அற்ப காரணங்களை கூறும் அதிகாரிகள்  மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்தால் என்ன எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க: வக்ஃப் சட்டத் திருத்தம்... இஸ்லாமிய அமைப்புகளின் உணர்வுகளும் கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும்: அன்புமணி

ஒரு மாவட்டத்தில் ஒரு இடங்களுக்கு மேல் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் என தெரிவிக்கும் நிலையில் திமுக பவள விழா நிகழ்ச்சிக்கு ஒரே நாளில் பல்வேறு இடங்களில் எப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டது? என நீதிபதி கேள்வி. இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.