சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பப்படுள்ளது. அதில், ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்க தேவையில்லை எனவும், ஒரு பள்ளிக்கு மட்டும் அங்கீகாரம் பெற்றால் போதும் என்றும் தெரிவித்துள்ளது.
ஒரே நிர்வாகத்தின் கீழ் பல பள்ளிகள் இருந்தாலும் தனித்தனியாக அங்கீகாரம் பெற வேண்டும் என்பது பழைய விதிமுறையாக இருந்தது. இதனை மாற்றி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1200 சதுர மீட்டர் இட பரப்பளவு இருந்தால் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளை நடத்தலாம் எனவும், 1600 சதுர மீட்டர் வரை இடமிருந்தால் பத்தாம் வகுப்பு வரையும் , 2400 சதுர மீட்டர் வரை இருந்தால் 12-ம் வகுப்பு வரை நடத்தலாம் எனவும்,
இட வசதிகள் இருந்தால் கிளைப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற தேவையில்லை என, சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
ஏற்கனவே மாநில அரசிடம் சிபிஎஸ்சி பள்ளிகளை தொடங்க தடையில்லா சான்றிதழ் நேரடியாக பெறவேண்டியதில்லை என அண்மையில் சிபிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டு இருந்தது இது மாநில பள்ளிக்கல்வித்துறைகளுக்கு இருக்கும் அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் தற்போது ஒரு பள்ளிக்கு மட்டும் அங்கீகாரம் வாங்கினால் அதே பள்ளியின் கிளைப் பள்ளிகளுக்கு தனித்தனியாக அங்கீகாரம் வாங்கத் தேவையில்லை என்பது சிபிஎஸ்சி பள்ளிகளை நடத்தும் நிர்வாகங்களுக்கு சாதகமானதாக அமைந்துள்ளது