RAIN: டெல்டாவில் ரெட் அலர்ட்.. நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ரெட் அலர்ட் காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தொடர்ந்து, மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். .
நவம்பர் மாதம் அதிக அளவில் மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், குறைவான அளவிலேயே மழையின் அளவு இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கடந்த சில வாரங்களாக குறைவான அளவிலேயே மழை பெய்தது. இந்நிலையில், வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதிப்பகுதி வலுவடைந்து தாழ்வு நிலையாக உள்ளது.
இன்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து 880 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 1050 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 2 தினங்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நெருங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், நாளை தமிழத்தின் பெரும்பாண்மையான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆகிய இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்லம் தமிழகத்தை நெருங்கி வருவதால் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரெட் அலர்ட் காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?