தமிழ்நாடு

Breaking: அரசுப் பேருந்து - கார் கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

ராமநாதபுரம் அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Breaking: அரசுப் பேருந்து - கார் கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!
அரசுப் பேருந்து - கார் மோதி விபத்து

ராமநாதபுரம்: உச்சிப்புளி அடுத்த பிரப்பன்வலசை பகுதியில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வாந்தி எடுப்பதற்காக பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனையடுத்து ஓட்டுநர், அரசுப் பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தி உள்ளார். அந்நேரம், ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் என்ற சொகுசு கார் அரசுப் பேருந்து மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.  

கடலாடி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உடல்நிலை சரியில்லாத பச்சிளம் குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் தங்கச்சிமடத்தில் உள்ள தங்களது வீடு திரும்புவதற்காக வாடகை கார் ஒன்றில் பயணித்துள்ளனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென நின்றுள்ளது. இதனை எதிர்பார்க்காத கார் ஓட்டுநர், செய்வதறியாது திகைத்துள்ளார். ஆனால், அதற்குள்ளாக கட்டுப்பாட்டை இழந்த கார், அரசுப் பேருந்து மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ராஜேஷ், செந்தில் மனோகரன், பிரணவிகா, தர்ஷிலாராணி, அங்காள ஈஸ்வரி ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பச்சிளம் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.