எஞ்சின் ஆயிலை குடித்து உயிர்வாழும் மெக்கானிக்.. 25 ஆண்டுகளாக தொடரும் கதை

Mechanic Drinking Old Bike Oil : வாகன இன்ஜின்களில் இருந்து வெளியேற்றப்படும் பழைய ஆயிலை குடித்து மெக்கானிக் உயிர் வாழ்வதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Oct 1, 2024 - 13:42
Oct 1, 2024 - 22:09
 0
எஞ்சின் ஆயிலை குடித்து உயிர்வாழும் மெக்கானிக்.. 25 ஆண்டுகளாக தொடரும் கதை

Mechanic Drinking Old Bike Oil : கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதி பானுவாரா நகரை சேர்ந்தவர் குமார் (45). இவருக்கு சொந்த பந்தங்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் யாரும் இல்லாததால், சிறு வயதிலிருந்தே தனக்கு கிடைத்த வேலைகளை செய்து வந்துள்ளார்.

ஒரு வழியாக டூவிலர் மெக்கானிக் வேலையை கற்றுக் கொண்டு அந்த தொழிலை வைத்து சில கடைகளில் வேலை பார்த்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சாப்பிட்டு வந்துள்ளார். ஆனால் இவரது சாப்பாடு என்பது சற்று வித்தியாசமாக உள்ளது. சின்ன வயதில் இவருக்கு வேலை ஏதும் கிடைக்காமல் அலைந்து திரிந்துள்ளார்.

அப்போது பசி எடுத்தாலும் சாப்பிடுவதற்கு கையில் பணம் இல்லாததால், வாகனங்களின் இன்ஜின்களுக்கு ஊற்றும் பழைய ஆயிலை குடிக்க ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த ஆயில் தான் அவருக்கு சாப்பாடு ஆகிவிட்டது, அது அவருக்கு ருசியானதால் தொடர்ந்து அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்.

கடந்த 25 ஆண்டுகளாக குமார் மூன்று வேளையும் வாகனங்களின் இன்ஜினில் இருந்து எடுக்கப்படும் பழைய ஆயிலை குடித்து உயிர் வாழ்ந்து வருகிறார். இதுதவிர வேறு எந்த சாப்பாட்டையும் அவர் சாப்பிடுவதில்லை தண்ணீர் கூட குடிப்பதில்லை என கூறப்படுகிறது. அதைப்போல கடந்த 13 ஆண்டுகளாக சபரிமலைக்கு அவர் நடந்து சென்று வருகிறார்.

குமார் இஞ்சின் ஆயிலை குடிப்பது பொதுமக்களுக்கு அதிசயமாகவும், அதிர்ச்சிகரமாகவும் இருந்துள்ளது. இதனால், குமார் பொதுமக்கள் முன்னிலையிலே இன்ஜின் ஆயிலை குடித்து காண்பித்துள்ளார். அதனைப் பார்த்த பலரும் அவர் மீது அனுதாபப்பட்டு பணம் உதவியும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow