12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்.. தமிழிசைக்கு இடமில்லை..! முழு விவரம்
President Appoints New Governors : 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
President Appoints New Governors : 10 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உட்பட 2 யூனியன் பிரதேசங்களுக்கான ஆளுநர்கள் மாற்றப்பட்டதாக நேற்று இரவு அறிவிப்பு வெளியானது. அதன்படி, மகாராஷ்ட்ரா ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
சில மாநிலங்களில் ஆளுநர் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், புதிய ஆளுநர்கள் நியமனமும், ஆளுநர்கள் பணியிட மாற்ற அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. மகாராஷ்டிரா முன்னாள் சபாநாயகர் ஹரிபாஹவு பாக்டே, முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார், பாஜக மூத்த தலைவர்களான ஓபி மாத்தூர், மைசூர் முன்னாள் எம்.பி., சி.எச்.விஜயசங்கர் உள்ளிட்ட 6 புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்து அறிவித்திருக்கிறார்.
மகாராஷ்டிரா - சி.பி.ராதாகிருஷ்ணன்
புதுச்சேரி - கே.கைலாஷ்நாதன், ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ்
ராஜஸ்தான் - ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே, மராட்டிய பேரவை முன்னாள் சபாநாயகர்
பஞ்சாப் - குலாம் சந்த் கட்டாரியா
ஜார்க்கண்ட் - சந்தோஷ் கன்வார்
சத்தீஸ்கர் - ராமன் தேகா
மேகாலயா - விஜயசங்கர்
தெலங்கானா - ஜிஷ்னு தேவ் சர்மா
சிக்கிம் - ஓம் பிரகாஷ் மாத்தூர்
அசாம் - லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா (மணிப்பூர் - கூடுதல் பொறுப்பு)
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவு பெறும் நிலையில், இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை.
What's Your Reaction?