துப்பாக்கியால் பேசும் போலீஸ்..குற்றத்தை ஒழிக்க என்கவுண்டர் தான் வழியா?
’உன்னை என்கவுண்டரில் போட்டுத் தள்ளிடுவேன்’ என்ற வசனங்களை நாம் திரைப்படங்களில் கேட்டதுண்டு. அதுபோல என்கவுண்டரில் ஒருவரை சுட்டுக்கொல்வது சாதாரணமான விஷயமா? தமிழகத்தில் ஒரே வரத்தில் 3 என்கவுண்டர்கள் அறங்கேறி இருப்பதற்கான காரணம் என்ன? இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் என்ன சொல்கின்றனர் என்பதே இந்த கட்டுரை
’உன்னை என்கவுண்டரில் போட்டுத் தள்ளிடுவேன்’ என்ற வசனங்களை நாம் திரைப்படங்களில் கேட்டதுண்டு. அதுபோல என்கவுண்டரில் ஒருவரை சுட்டுக்கொல்வது சாதாரணமான விஷயமா? தமிழகத்தில் ஒரே வரத்தில் 3 என்கவுண்டர்கள் அறங்கேறி இருப்பதற்கான காரணம் என்ன? இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் என்ன சொல்கின்றனர் என்பதே இந்த கட்டுரை..
போலீஸார் தங்கள் பணியை மேற்கொள்ளும்போது, எதிர்பாராதவிதமாக, அவர்கள் மீது குற்றவாளிகள் தாக்குதல் நடத்தினால், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளும் பதிலடித் தாக்குதல்தான் என்கவுன்டர். தமிழகத்தில் பெரிய பெரிய கொலை சம்பவங்கள் நடைபெறும் போது, அதன் பின்னணியில் இருக்கும் குற்றவாளிகளும், கைதானவர்களும் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் தமிழகத்தையே உலுக்கிய ஆர்ம்ஸ்டாரங் கொலை வழக்கு. இதில் மொத்தம் 11 பேருடன் கைதான திருவேங்கடத்தை என்கவுண்டரில் போலீசார் சுட்டுக்கொன்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக போலீஸ் தங்களது காவலில் அவர்களை எடுத்தது. இந்த விசாரணையின்போது ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்பதற்காக திருவேங்கடத்தை அழைத்துச் சென்றதாகவும் அப்போது அவர் தப்பிச் சென்று காவல்துறையைத் தாக்க முயன்றதாகவும் அதனால், காவல்துறை அவரைச் சுட்டுக்கொன்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு நடக்கும் என்கவுண்டர்களால் ஒரு குற்றத்தில் யாருக்கெல்லாம் பங்கு உள்ளது என்ற தகவல்கள் அழிவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் இது உண்மையில் என்கவுண்டர் தானா அல்லது எதையேனும் மறைப்பதற்கான திட்டமா என பொதுமக்கள் இடையே பல தருணங்களில் கேள்வி எழுந்ததுண்டு.
திருவேங்கடத்தின் என்கவுண்டர் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 3 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை டிபி சத்திரத்தில் போலீசாரை பீர் பாட்டிலால் தாக்கி தப்பிக்க முயன்ற ரவுடி ரோகித் ராஜ் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. ஆகஸ்ட் 17ம் தேதி சிவகங்கையில் சோதனையின் போது காவல் ஆய்வாளர் குகனை வெட்டிய அகிலன் மீது துப்பாக்கிச்சூது நடத்தப்பட்டது. அதேபோல ஆகஸ்ட் 19ம் தேதி அஞ்சுகிராமம் எஸ்.ஐ லிபி பால்ராஜை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சித்த கன்னியாகுமரியிம் பிரபல ரவுடி செல்வத்தை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர் போலீசார்.
தமிழ்நாட்டில் நடந்த பிரபல என்கவுண்டர்கள்:
1979ம் ஆண்டில் ஒகேனக்கல்லில் என்கவுண்டர் செய்யப்பட்ட அப்பு, 1980ம் ஆண்டில் என்கவுண்டர் செய்யப்பட்ட பாலன், 1990ம் ஆண்டில் திண்டுக்கல் அருகே என்கவுண்டர் செய்யப்பட்ட நாகராஜன், 1984ல் என்கவுண்டர் செய்யப்பட்ட சீவலப்பேரி பாண்டி, 1996ல் சென்னை லயோலா கல்லூரி அருகே என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி ஆசைத்தம்பியும், அவரது கூட்டாளிகளான குணா மற்றும் மனோ, அதே ஆண்டில் அடையாறு அருகே என்கவுண்டர் செய்யப்பட்ட ஜிம் பாடி கபிலன், 2003ம் ஆண்டில் தூத்துகுடியில் என்கவுண்டர் செய்யப்பட்ட வெங்கடேசன், அதே ஆண்டில் அயோத்திகும்பம் பகுதியில் என்கவுண்டர் செய்யப்பட்ட வீரமணி, 2006ம் ஆண்டில் என்கவுண்டர் செய்யப்பட்ட கொர கிருஷ்ணன், 2007ம் ஆண்டில் மயிலாடுதுறையை சேர்ந்த மணல்மேடு சங்கரின் என்கவுண்டர், 2009ம் ஆண்டில் நடந்த சென்னை தனசேகரனின் என்கவுண்டர், 2010ம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட கொற நடராஜன், 2015ம் ஆண்டில் பத்தமடையில் பிரபல ரவுடி கிட்டப்பாவின் என்கவுண்டர், 2018ம் ஆண்டில் தரமணியில் என்கவுண்டர் செய்யப்பட்ட ராயப்பேட்டை ரவுடி ஆனந்தன், 2019ம் ஆண்டில் சென்னை மாதவரம், பகுதியில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி வல்லரசு, அதே ஆண்டில் சென்னை கொரட்டூரில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி மணிகண்டன் என துப்பாக்கியால் போலீஸின் என்கவுண்டர் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.
சட்டம் சொல்வது என்ன?
1995-1997 வரை மும்பை காவல்துறையால் 99 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டது என்ற செய்தி வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை எதிர்த்து சிவில் உரிமைக்கான மக்கள் இயக்கம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் என்கவுண்டர்களை நெறிமுறை படுத்த 16 முக்கிய விதிமுறைகளை விதித்தது.
உடனடியாக எஃப்.ஐ.ஆர் போட்டு, மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடுவது, தவறாக என்கவுண்டர் நடந்ததாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்வது போன்ற முக்கிய விதிமுறைகள் விதிக்கப்பட்டன.
மேலும் படிக்க: HBD Chennai: சென்னை வாசிகளின் கலாச்சார பாரம்பரியத்தையும், ஒற்றுமையையும் பேசும் மவுண்ட் ரோடு தர்காவின் கதை
மனித உரிமை ஆர்வல்கர்கள்:
என்னதான் என்கவுண்டட்களால் பல ரவுடிக்கள் சமூகத்தில் இருந்து களையப்பட்டாலும், குற்றங்களுக்கு என்கவுண்டர் தான் தண்டனையா எனவும் இது மனித உரிமை மீறல் எனவும் பல ஆண்டுகளாக தெரிவித்து வருகின்றனர் மனித உரிமை அர்வலர்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் என்கவுண்டர்கள் குறித்து மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான மில்டன் தனது கருத்துக்களை குமுதம் செய்தியுடன் பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் நடக்கும் என்கவுண்டர்கள், சமூகத்திற்கு எதிரானது எனவும், குற்றவாளிகளுக்கும் வாழ உரிமையுள்ளது எனவும் தெரிவித்துள்ளார் வழக்கறிஞர் மில்டன். மேலும் என்கவுண்டர்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டியது, தண்டிக்கப்பட வேண்டியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வழக்கறிஞரிடம் போலியாக அல்லது தேவையற்ற என்கவுண்டர்களை நடத்தும் போலீசார் மீது என்ன நடவடிக்கை பாயும் என்பதை பற்றி அவரிடம் கேட்டப்போது, 302 பிரிவின் கீழ் அந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இந்த மாதிரியான வழக்குகளையும் போலீசாரே விசாரிப்பதால் இது சில சமயங்களில் பாராபட்சமாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். என்கவுண்டர் மாதிரியான குறுக்கு வழிகளை பின்பற்றினால் சரியான தீர்வுகள் கிடைக்காது எனவும், போலீசார் இந்த மாதிரியான போக்கை கைவிட வேண்டும் எனவும் வழக்கறிஞர் மில்டன் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=k4EaYi29Xyo
What's Your Reaction?