தமிழ்நாடு

Chennai Traffic : ’ஊருக்கு போன மாதிரிதான்..’ போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த மக்கள்

Chennai Traffic : மூன்று நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, தென் மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பய்ணம் செய்ததால் சென்னையில் முக்கிய சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Chennai Traffic : ’ஊருக்கு போன மாதிரிதான்..’ போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த மக்கள்

மூன்று நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, தென் மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பய்ணம் செய்ததால் சென்னையில் முக்கிய சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Chennai Traffic : ஆகஸ்ட் 24 மற்றும் 25 வார இறுதி விடுமுறையை தாண்டி, திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அன்றும் பொது விடுமுறையாக இருக்கிறது. இதனால் வழக்கம்போல காலண்டரை பாத்த மக்கள், அடடே இந்த வாரம் 3 நாள் விடுமுறையா என்று தெரிந்த உடன் பயங்கர குஷியில் இருந்தனர். இதனால் ‘இனி சின்ராச கையில பிடிக்கமுடியாது’ என்பது போல சொந்த ஊர்களுக்கு செல்லவும், சிலர் பல வருடங்களாக போகாமல் இருக்கும் மினி டூர்களுக்கும் கிளம்பிச்சென்றுள்ளனர். இதனால் பொதுமக்கள் பயணம் செல்ல ஏதுவாக முழுவீச்சில் போக்குவரத்து துறையும், போலீசாரும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உழைக்கும் மக்கள் ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து செந்த ஊர்களுக்கு படையெடுத்ததால், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் கூட்டம் அலைமோதியது. மேலும் பரனூர் சுங்கச்சாடி போன்ற முக்கிய சாலைகள் ஸ்தம்பித்து போனது. ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக சென்னை-திருச்சி நெடுஞ்சாலை உள்ளதால் வாகன போக்குவரத்து மிகுந்த பரபரப்புடன் காணப்படுவது வழக்கம். இவ்வாறு ஊர்ந்து சென்றுக்கொண்டிருந்த வாகனத்தால், ’இங்கேயே லீவு முடிந்துவிடும் போல’ என மக்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். 

மேலும் அங்கிருந்த டிராபிக் போலீசார் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய உதவினார். பேருந்து நிலையத்தில் மட்டுமல்லாமல், சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியதால் மக்கள் அவதியுற்றனர்.

மேலும் படிக்க: முருகனுடன் சமாதானம்..கடவுளை வைத்து காய் நகர்த்துகிறதா திமுக?

விடுமுறை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஆனால், அதையும் பிடிக்காமல் ஆக்கிவிடுகிறது இந்த போகுவரத்து தெரிசல் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.