சென்னை: விஜய்யின் தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் என்ற கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இத்திரைப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாகவுள்ளதால், விஜய் ரசிகர்கள் செம வைப்-ல் உள்ளனர். ஆனால், ஆக்ஷன் ப்ளஸ் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள கோட், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்குமா அல்லது லியோ படம் போல ஏமாற்றம் தருமா என புரியாத புதிராக உள்ளது. இதற்கெல்லாம் காரணம் கோட் படத்தில் இருந்து இதுவரை வெளியான 3 பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதாக ரீச் ஆகவில்லை.
பல வருடங்களுக்குப் பின்னர் விஜய்யுடன் மீண்டும் இணைந்ததால், கோட் படத்தின் பாடல்களில் யுவன் ஸ்பெஷல் ட்ரீட் கொடுப்பார் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முதல் பாடலான விசில் போடு, அடுத்து ரிலீஸான சின்ன சின்ன கண்கள், சமீபத்தில் வந்த ஸ்பார்க் சாங் ஆகிய மூன்றுமே ஆவரேஜ் தான் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். முக்கியமாக மூன்றாவது சிங்கிளில் விஜய்யின் டீ-ஏஜிங் லுக் சொதப்பலாக உள்ளது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தனர். அதேநேரம் கோட் மூன்றாவது பாடல், இந்தியில் கேட்க சூப்பராக உள்ளது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். யுவன் இசையில் பாடல்கள் ஹிட் அடிக்கும் என விஜய் ரசிகர்கள் காத்திருக்க, அதில் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில், கோட் படத்தின் ஸ்பார்க் பாடலை பிரபலப்படுத்த, யுவன் சங்கர் ராஜாவே நேரடியாக களமிறங்கிவிட்டார். இப்பாடலுக்கு ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்ய அதற்கு ரசிகர்கள் விதவிதமாக ரியாக்ட் செய்து வருகின்றனர். ரசிகை ஒருவரோ, “கோவப்படாதீங்க யுவன் அண்ணா... உங்களோட முந்தையை பாடல்களுக்கு இப்பவும் வைப் பண்ணிட்டு இருக்கோம். ஆனா இந்த கோட் ஆல்பம் சத்தியமா முடியல. விஜய் மேல அப்படி என்ன காண்டு, குடும்பத்தோட சேர்ந்து இப்படி செஞ்சிவிட்டுருக்கீங்க. வாரிசு படம் மொக்கையா இருந்தாலும் சாங்ஸ்லாம் ஓகே ரகம். ஆனா கோட் படத்துல அப்படி எதுவும் இல்ல... சீரியஸ்ஸா எப்படி மனசு வருது, இந்தப் பாட்டுக்கு வைப் பண்ண..? அதுவும் இந்தப் பாட்டுல விஜய்ண்ணா லுக் ஸ்ப்பா வேண்டாம்னா விட்டுடு” என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், இன்னும் பலரும் யுவனின் ரீல்ஸ் வீடியோவை பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். முன்னதாக விசில் போடு பாடல் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்ட போது, யுவனின் இன்ஸ்டா ஐடி ஹேக் செய்யப்பட்டது. ஆனால், அவர் நெட்டிசன்களின் ட்ரோல்களுக்கு பயந்து தான் இன்ஸ்டா ஐடியை டெலிட் செய்துவிட்டார் என சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது ஸ்பார்க் பாடலுக்கு ப்ரோமோஷன் செய்வதாக நினைத்து, மீண்டும் நெட்டிசன்களின் ட்ரோல்களில் சிக்கியுள்ளார் யுவன். பாடல்கள் தான் இப்படி உள்ளன, படத்தில் பின்னணி இசையாவது மாஸாக இருக்குமா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க - சிவகார்த்திகேயனுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்
இந்நிலையில், விஜய்யின் தி கோட் திரைப்படம் ஐமேக்ஸ் ஸ்க்ரீனிலும் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. கோட் ரிலீஸாக இன்னும் ஒரு மாதமே உள்ளதால் ஆடியோ லான்ச், ட்ரெய்லர் என அடுத்தடுத்து இப்படத்தின் அப்டேட்கள் வெளியாகவுள்ளன. கோட் ட்ரெய்லரில் விஜய் மட்டுமில்லாமல் மற்றவர்களின் கேரக்டர் பற்றியும் அப்டேட்கள் கிடைக்கும் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.
View this post on Instagram