Ajith: அஜித் அப்படி ஒரு சம்பவம் பண்ணிருக்கார்... குட் பேட் அக்லி அப்டேட் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்!
Good Bad Ugly Movie Update : அஜித்தின் குட் பேட் அக்லி படம் குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்துள்ள அப்டேட், ரசிகர்களுக்கு செம ஹைப் கொடுத்துள்ளது.
சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோ அஜித் ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அஜித் நடிப்பில் உருவாகும் இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடந்தாண்டே தொடங்கப்பட்ட விடாமுயற்சி ஷூட்டிங் தற்போது தான் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதற்காக அஜர்பைஜான் சென்றுள்ள அஜித், விரைவில் குட் பேட் அக்லி படக்குழுவுடன் இணையவுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.
கடந்த சில வருடங்களாகவே ஆக்ஷன் ஜானர் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித். ஆனால், குட் பேட் அக்லி படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள் அனைத்தும் அஜித் ரசிகர்களுக்கே சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது. தர லோக்கல் கெட்டப்பில் தாறுமாறாக இருந்தன அஜித்தின் போஸ்டர்கள். அதுமட்டும் இல்லாமல் கடைசியாக வெளியான போஸ்டரில் இடம்பெற்றிருந்த “God Bless u Maamae” என்ற கேப்ஷனும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ்ஸாக இருந்தது. இதெல்லாம் வைத்து பார்க்கும் போது, வழக்கமான ஸ்டைலிஷ் கேரக்டர்களில் இருந்து விலகி, அஜித் இறங்கி அடிப்பார் என்றே தெரிகிறது.
இதனை கன்ஃபார்ம் செய்யும் விதமாக குட் பேட் அக்லி படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்துள்ள அப்டேட், அஜித் ரசிகர்களுக்கு அட்வான்ஸ் பொங்கல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தேவி ஸ்ரீ பிரசாத்திடம் குட் பேட் அக்லி அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இதனையடுத்து அவர்களுக்காக அப்டேட் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத், குட் பேட் அக்லி படத்தில் அவர் கம்போஸ் செய்துள்ள பாடல் குறித்து பேசினார். அதாவது அஜித்துக்கான மாஸ் சாங் ஒன்று குட் பேட் அக்லி படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதைவிட முக்கியமாக அந்தப் பாடலில் அஜித் வெறித்தனமாக டான்ஸ் ஆடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அஜித் சினிமாவில் அறிமுகமான புதிதில் டான்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து சில பாடல்களில் நடித்திருந்தார். ஆனால், அடுத்தடுத்து சர்ஜரி செய்யப்பட்டதால் ரொம்ப ஹெவியான டான்ஸ் பாடல்களை தவிர்த்து வந்தார். இதனால் அவரை விஜய் ரசிகர்கள் அடிக்கடி ட்ரோல் செய்து வந்தனர். அதேநேரம் பைக், கார் சேஷிங் காட்சிகளில் மட்டும் ரிஸ்க் எடுத்து ஒரிஜினலாக நடித்து வருகிறார். அதேபோல், இனி நடனத்திலும் மற்ற ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்க முடிவு செய்துவிட்டாராம் அஜித். அதனால் தான் குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்காக மரண மாஸ் பாடல் ஒன்றை கொடுத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.
குட் பேட் அக்லி அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனால், இப்படத்தின் ஷூட்டிங் நான் ஸ்டாப்பாக நடந்துகொண்டிருக்கிறது. விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மட்டும் தற்போது அஜர்பைஜான் சென்றுள்ளார் அஜித். அப்போது இயக்குநர் வெங்கட் பிரபுவை அஜித் சந்தித்ததும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதோடு மங்காத்தா 2ம் பாகம் உருவாகிறதா என்றும் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்தத குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?