திருமணத்தை மீறிய உறவு.. இடைஞ்சலாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்..

பரமத்திவேலூர் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக குழந்தையை தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sep 2, 2024 - 15:26
Sep 2, 2024 - 23:34
 0
திருமணத்தை மீறிய உறவு.. இடைஞ்சலாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்..
4 வயது குழந்தை கொலை செய்த தாய் கைது

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காந்திபுரத்தைச் சேர்ந்த முத்தையன் (22), கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறது. இவருக்கு சினேகா (20) என்ற மனைவியும், பூவரசி என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சினேகாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சரத்குமார் (21) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக நாமக்கல் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, சினேகா இனிமேல் தனது கணவன் முத்தையாவுடன் சேர்ந்து வாழ்வதாக கூறியுள்ளார். பிறகு நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து குழந்தையுடன் கணவனுக்கு தெரியாமல், சினேகா தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர், பரமத்திவேலுார் அருகே சேலூர் செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த உறவினரான கோகிலா (40) வீட்டுக்கு சினேகா சென்றுள்ளார். இதனையடுத்து, சினேகாவும், கோகிலாவும் சேர்ந்து திருமணத்தை மீறிய உறவுக்கு இடைஞ்சலாக இருக்கும் 4 வயது குழந்தை பூவரசியை கொலை செய்ய முடிவு செய்தனர்.

பிறகு சனிக்கிழமை அன்று [31-08-24] மதியம் 2:00 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை பூவரசியை தூக்கிக்கொண்டு வந்த சினேகா கிணற்றில் வீசி உள்ளார். இதில் குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையைக் கிணற்றில் வீசுவதை, அருகில் விவசாய தோட்டத்தில் வேலை பார்த்ததும் உடனடியாக பரமத்தி வேலுார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, நாமக்கல் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., முருகேசன், பரமத்திவேலுார் எஸ்.ஐ., குமார் தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் தாய் சினேகா, திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டார். மேலும், குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ய ஆலோசனை கூறியதாக கோகிலாவும் ஒப்புக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து பரமத்திவேலுார் போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தையின் தாய் சினேகா மற்றும் இவரது உறவினரான கோகிலாவை கைது செய்தனர். பெற்ற குழந்தையே தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow