Champai Soren Join BJP : பாஜகவில் ஐக்கியமாகும் சம்பாய் சோரன்.. என்று இணைகிறார் தெரியுமா?

Champai Soren Join BJP on August 30 : ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் ஆகஸ்ட் 30-ம் தேதியன்று பாஜகவில் இணைய உள்ளார்.

Aug 27, 2024 - 12:24
Aug 27, 2024 - 20:26
 0
Champai Soren Join BJP : பாஜகவில் ஐக்கியமாகும் சம்பாய் சோரன்.. என்று இணைகிறார் தெரியுமா?
Champai Soren Join BJP on August 30

Champai Soren Join BJP on August 30 : ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன். இவர் சோரன் குடும்பத்திற்கு மிக நெருக்கமாக இருந்தவர். ஹேமந்த சோரனின் தந்தை ஷிபு சோரனுக்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு சம்பாய் சோரன் ஆற்றிய பணிகள் ஏராளம். ஜார்கண்டின் புலி என பரவலாக அழைக்கப்படும் சம்பாய் சோரன், ஷிபு சோரனுக்கு ஹனுமான் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறார். நில மோசடி வழக்கில் தனது முதல்வர் பதவியை ஜனவரி 31ம் தேதி ராஜினாமா செய்தார் ஹேமந்த் சோரன். இதனையடுத்து அவர் அமலாக்கத்தூறையால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனால் தன்னுடைய தந்தைக்கு நெருங்கிய நண்பராக இருந்த சம்பாய் சோரன் பிப்ரவரி 2ம் தேதி முதல்வராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஜூன் 28ம் தேதி ஹேமந்த சோரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் மீண்டும் ஜூலை 4ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் ஹேமந்த்.

இதனால், சம்பாய் சோரன் ஹேமந்த சோரன் அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அதேநேரம் சம்பாய் சோரன் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருப்பதாவும், ஹேமந்த சோரன் கைதாகியிருந்த போது சம்பாய்-க்கும் அவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், பாஜகவில் அவர் இணைய இருப்பதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் இந்த தகவல்களை மறுத்தார் சம்பாய்.

இந்நிலையில், ஜார்க்கண்டில் ஆளும் முக்தி மோர்ச்சா கட்சியின் 6 எம்.எல்.ஏக்களுடம் சம்பாய் சோரன் டெல்லிக்கு விசிட் அடித்தார். இதனால் சற்றே அடாங்கியிருந்த வதந்திகள் மீண்டும் பேசுபொருளாக மாறியது. டெல்லியில் சம்பாய் சோரன் பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து, அக்கட்சியில் இணைய இருப்பதாக பேசப்பட்டது.

இதனிடையே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் போஸ்டர்களில் இருந்து சம்பாய் சோரனின் புகைப்படங்கள் நீக்கப்பட்டன. இதனால்,  கட்சியில் தான் அவமதிக்கப்பட்டதாக கூறி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சம்பாய் சோரன்.  மேலும், தனக்கு 3 வழிகள் திறந்து இருக்கிறது எனவும் அவர் அப்போதே தெரிவித்திருந்தார். 

இதையடுத்து சம்பாய்சோரன் தனது அடுத்த நகர்வாக புதிய கட்சியை துவக்கி பா.ஜ.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்வது, அல்லது அரசியலிலிருந்து விலகுவது, அல்லது பா.ஜ.வில் இணைவது என மூன்று வாய்ப்புகள் உள்ளதாக கூறியிருந்தார். 

மேலும் படிக்க: 'தங்கத்தில் ஏற்பட்ட பிளவு'.. ரஜினி-துரைமுருகன் மோதல் குறித்து வைரமுத்து விளக்கம்!

அவர் கூறியபடியே ஆகஸ்ட் 30-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகவும், ராஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் பாஜக தலைவர்களை சந்தித்து அவர்கள் முன்னிலையில் பாஜவில் சேர திட்டமிட்டுள்ளார். இதனை அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா உறுதி செய்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow