Actor Jayam Ravi Divorce Case: ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதி விவாகரத்தில் திடீர் திருப்பம்

விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி  அவரின் மனைவி இடையே சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சு நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Nov 16, 2024 - 02:04
Nov 16, 2024 - 02:53
 0
Actor Jayam Ravi Divorce Case: ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதி விவாகரத்தில் திடீர் திருப்பம்
ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதி விவாகரத்து விவகாரம்... சமரச பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் உத்தரவு

ஜெயம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் ரவி. இவர் பிரபல சினிமா எடிட்டர் மோகனின் இளைய ஆவார். இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநர் ஆவர்.

ராஜா இயக்கத்தில் உருவான ஜெயம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், ஜெயம் ராஜா, ஜெயம் ரவி என்றே அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஜெயம் ரவி பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னனி தமிழ் நடிகராக திகழ்கிறார்.

சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஜெயம் ரவி திருமணம் செய்து கொண்டனர்.

ஜெயம் ரவி - ஆர்த்தி ரவி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால் இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ரவி அறிவித்தார். ஆனால் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி விவகாரத்து தருவதற்கு எனக்கு விருப்பம் இல்லை என்று கூறினார். சேர்ந்து வாழ விரும்புவதாகவும், நேரடியாக பேச ஒரு வாய்ப்பு ஏற்படுத்து தருமாறு கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார். 

இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு அப்போது ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்தார். அவரின் மனைவி ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். 

இதைத்தொடர்ந்து, இருவருக்கும் இடையான பிரச்சினை தொடர்பாக குடுநல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக இன்றைய தினமே பேச இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார். அங்கு எடுக்கபடும் முடிவு தொடர்பாக விபரங்களை தாக்கல் செய்யவும் நீதிபது உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow