அதிரடி வான்வழி தாக்குதல்... ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவர் மரணம்?
ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் அடுத்த தலைவராக கருதப்பட்ட ஹசீம் சபிதீன் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 35,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.
இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் இருந்து வெளியேறி உணவு, உடை, மருத்துவ வசதிகளில் இன்றி பரிதவித்து வருகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பல்வேறு உலக நாடுகள் வழியுறுத்தியும் இஸ்ரேல் தாக்குதலை(Israel Attack) நிறுத்த மறுத்து வருகிறது.
போர் விதிகளை தொடர்ந்து மீறி வரும் இஸ்ரேல் ராணுவம்(Israel Army) மருத்துவமனைகள் மீதும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலும் தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளை கவலையடைச் செய்துள்ளது. மேலும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸரல்லாவையும் ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தது இஸ்ரேல். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இதை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல், ஸ்தம்பித்து போனது என்றே கூறலாம்.
மேலும் படிக்க: ஜம்மு காஷ்மீர் தேர்தல்... எக்ஸிட் போல் முடிவுகள்... பாஜகவுக்கு பெரும் பின்னடைவு?
இந்நிலையில், லெபனான் தலைநகர் பெரூட்டில், நேற்றூ (அக். 5) அதிகாலை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அதிலும் குறிப்பாக ஹிஸ்புல்லாவின் உளவுப்பிரிவு தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் அடுத்த தலைவராக கருதப்பட்ட ஹசீம் சபிதீன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஹசீம் உண்மையிலேயே கொல்லப்பட்டாரா என்பது குறித்த தகவலை ஹிஸ்புல்லா அமைப்பு இதுவரை வெளியிடவில்லை. இதுமட்டுமில்லாமல் தரைவழியாகவும் லெபானானுக்குள் ஊடுருவிய இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
What's Your Reaction?