IPL MEGA AUCTION 2025: ஏலம் போகாத ஸ்டார் ப்ளேயர்ஸ்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் உள்ளிட்ட பல முக்கிய ஸ்டார் வீரர்களை வாங்க எந்த அணியும் முன்வராததால் ஐபிஎல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
2025 ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் (நவ.24) நேற்று தொடங்கியது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் 10 அணிகளில், முதல் நாள் ஏலத்தில் 467 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு, 72 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து இன்று நவ.25 ஆம் தேதி 2வது நாள் ஏலம் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் ஏலத்தை பொறுத்தவரை, இந்திய வீரர்களை காட்டிலும், வெளிநாட்டு வீரர்களுக்கே அதிக அளவில் மவுசு இருந்து வந்தது. ஆனால், 2025 ஐபிஎல் மெகா ஏலம் இந்த பிம்பத்தை உடைத்துள்ளது. ஜானி பாஸ்ட்ரோ, ஃபில் சால்ட், டேவிட் வார்னர், சலேம்கெய்ல், கேன் வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல் போன்ற முக்கிய ஸ்டார் வீரர்கள் இந்த ஏலத்தில் விற்பனையாகதது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெகா ஏலத்திலும், மினி ஏலத்திலும் அதிக தொகைக்கு ஏலம் போன முக்கிய வெளிநாட்டு வீரர்கள் இம்முறை அடிப்படை விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர். இவை ஐபிஎல் அணிகள் உரிமையாளர்களுக்கு வெளிநாட்டு வீரர்களின் மீதிருக்கும் பிம்பத்தை உடைத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
டேவிட் வார்னர்
கிரிக்கெட் உலகில் புகழ்பெற்றவரும் ஆஸ்திரேலியா டி20 தொடரின் கேப்டனுமாக இருந்த டேவிட் வார்னர் ஐபிஎல் 2025 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றார். சன்ரைசர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த டேவிட் வார்னரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. சமீபத்தில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், அவர் தனது அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நிர்ணயித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இன்றைய ஏலத்தில் விலைபோகவில்லை. ஐபிஎல் வரலாற்றில் 3 முறை ஆரஞ்சு தொப்பியை வென்ற ஒரே பேட்ஸ்மேன் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். ஆனால், அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் போது, அந்த அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றவர் கேன் வில்லியம்சன். இதுவரையில் 79 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2128 ரன்கள் எடுத்துள்ளார்.ஆனால், கடந்த முறை 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடிய கேன் வில்லியம்சன், 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன் பிறகு ப்ளேயின் லெவனில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது.
குஜராத் டைட்டன்ஸ் அவரை விடுவித்த நிலையில், அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு பதிவு செய்திருந்தார். ஆனால், ஐபிஎல் 2025 ஏலத்தில் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்க விரும்பவில்லை.
பிற வீரர்கள்
இங்கிலாந்து வீரர் ஃபில் சால்ட் அடிப்படை விலையான 2 கோடிக்கும், ஆப்கன் வீரர் வாகர் சலேம்கெய்ல் அடிப்படை விலை ரூ. 75 லட்சத்திற்கும், 2023 ஐபிஎல் தொடரில் 4 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட கார்த்திக் தியாகி, இந்திய வீரர் யாஷ் தல் அடிப்படை விலையாக ரூ 30 லட்சத்துக்கு ஏலத்திற்கு வந்த நிலையில்,அவர்களை எந்த ஐபிஎல் அணிகளும் யாரும் ஏலத்தில் எடுக்காததால், அன்சோல்ட் வீரராக அறிவிக்கப்பட்டனர்.
What's Your Reaction?