அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்திருக்கிறது என தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளை விமர்சித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ’think to dare’ என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ரவி, “காமராஜர் கல்வியின் ஆற்றலை புரிந்திருந்தார். அதனால் பல கல்விகூடங்களை அவர் திறந்தார். மேலும் மதிய உணவை அவர் மாணவர்களுக்கு வழங்கினார். அவர் ஏற்படுத்திய கட்டமைப்பில் நாம் பயணித்தோம். ஆனால் இன்று இந்த காலக்கட்டத்தில் அந்த தொலைநோக்கு பார்வை இல்லை.
அரசு பள்ளிகளின் தரம் குறைந்து, 70 சதவிகிதம் மாணவர்கள் எண்களை படிக்க முடியாமலும், 40 சதவிகிதம் மாணவர்கள் எழுத்துக்களை படிக்க முடியாமலும் இருக்கின்றனர்” என அவர் கூறினார்.
மேலும், தமிழகத்தில் கல்விதரம் குறைந்திருக்கிறது. மாணவர்களின் கற்கும் திறன் குறைந்தும் அவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது. இதனால் வேலை வாய்பின்மை ஏற்படுகிறது. மாணவர்கள் போதைக்கு அடிமை ஆகியுள்ளனர். மாணவர்கள் கஞ்சா மட்டுமில்லாமல் ஹாராயின், மெத்தபொட்டமைன் போன்ற Chemical synthetic drugsகளுக்கும் அடிமையாகி உள்ளனர்.
கஞ்சா ஆயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளது. கஞ்சா மட்டும்தான் நம் கண்களுக்கு தெரிகிறது. ஆனால் இதற்கு மட்டும் மாணவர்கள் அடிமையாக இல்லை. இன்னும் பல போதை பொருட்களுக்கு அவர்கள் அடிமையாகியுள்ளனர்.
மாணவர்கள் மத்தியில் உள்ள போதை பழக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இப்போதெல்லாம் எளிதாக போதைப்பொருள் கிடைக்கிறது. வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் வருகின்றன. இதன் மூலம் பல ஆயிரம் கோடி போதைப்பொருள் வணிகம் நடைபெறுகிறது. ஆசிரியர்கள் மாணவர்களின் போதைபழக்கத்தை கட்டுபடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்" , என அவர் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க: 2024ல் அதிக வரி செலுத்தும் விஜய்... ஷாருக்கானுக்கு அடுத்து தளபதி தான்... இவ்வளவு கோடியா?
அரசு பள்ளி மாணவர்கள் எத்தனையோ துறைகளில் சாதனை புரிந்து வரும் இந்த காலக்கட்டத்தில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் குறைந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சித்திருப்பது பல தரப்பில் கண்டனங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.