மின்சாரம் தாக்கி உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி... முதலமைச்சர் உத்தரவு
சென்னை வேளச்சேரி விஜயநகரில் மின்சார ஒயர் அறுந்து 45 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசு சார்பாக 5 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வேளச்சேரி விஜயநகர் பகுதியில், அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்த சக்திவேல் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், ரூ.5 லட்சம் நிதியுதவியும் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
வேளச்சேரி விஜயநகர் இரண்டாவது பிரதான சாலையில் மாலை 5 மணி அளவில் வேளச்சேரி ராம் நகரை சேர்ந்த சக்திவேல் (45) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மின்சார கம்பத்தில் இருந்து மின்கம்பி அருந்து அவர் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்
இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அதனைத்தொடர்ந்து அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினர்
இத எடுத்து அங்கிருந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வேளச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சக்திவேல் உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாவட்டம், வேளச்சேரி விஜயநகர் முதல் பிரதான சாலை, இரண்டாவது குறுக்குத் தெருவில் சக்திவேல், த.பெ.விநாயகம், வயது 47 என்பவர் இன்று (30.11.2024) மாலை சுமார் 05.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்று மற்றும் கனமழையால் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
சக்திவேல் மறைவு அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மின்சார வாரியம் சார்பாக ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என அந்த முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?