மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு விருந்தளிக்கும் விஜய்..!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று விருந்தளிக்கிறார்.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேரில் கலந்துக்கொண்டு விருந்தளிக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. த.வெ.க மாநாட்டில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்தார். மாநாட்டில் விஜய் பேசியது தற்போது வரை விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
த.வெ.க மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் பல்வேறு நில உரிமையாளர்களின் விவசாய நில உரிமையாளர்களின் விவசாய நிலங்களும் அடங்கும்.
மாநாட்டிற்கு நிலங்களை பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்து கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் மாநாட்டிற்காக இடம் கொடுத்த விவசாயிகளுக்கு இன்று பனையூரில் வைத்து, விருந்தளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மதியம் விருந்து அளிக்கப்படுகிறது. விக்கிரவாண்டி வி.சாலையை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் 2 பஸ்கள் மூலம் அழைத்து வரப்படுகிறார்கள், அவர்களுக்கு இன்று மதியம் பனையூரில் விஜய் அவரது கையால் விருந்து அளிக்கிறார் என்று கூறப்படுகிறது.
மாநாட்டிற்காக இடம் கொடுத்தவர்கள் சென்னை வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் நேரில் கலந்துகொண்டு அவர்களுக்கு விருந்தளிக்க இருக்கிறார். முன்னதாக மாநாட்டிற்கு இடம் கொடுத்தவர்களுக்கு மாடு, கன்றுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?