RN Ravi About Mudra Scheme : தமிழ்நாட்டில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் மத்திய அரசின் முத்ரா திட்டத்தில் நிதியுதவி பெற்று தொழில் நிறுவனங்களை தொடங்கியுள்ளதாகவும், முத்ரா திட்டத்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களை வளம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய பாதையில் அழைத்து செல்வது எனும் தலைப்பிலான கருத்தரங்கு சென்னை ஐஐடியில் நடைபெற்றது . இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஆளுநர் பேசியதாவது, சென்னை ஐஐடியில் பயிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் தங்கள் மாநிலத்தை முன்னேற்ற முன்வர வேண்டும் என ஆளுநர் அறிவுரை கூறினார். தொடந்து,
ஐஐடியில் பயிலும் வடகிழக்கு மாநில மாணவ , மாணவியர் தங்கள் பாரம்பரியப்படி உடை அணிந்து மேடைமுன் சென்று ஆளுநருக்கு வணக்கம் தெரிவித்தனர்.
2013 வரை, அப்போதைய சூழ்நிலையால், வடகிழக்கு மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1000 பேர் வன்முறையில் இறந்தனர். முதலீட்டாளர்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினர், வடகிழக்கு மாநிலங்கள் ஆபத்தானது என்ற ஒரு கதை கட்டமைக்கப்பட்டது. 2014 ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, நீங்கள் நாங்களே, நாம் வேறானவர்கள் இல்லை என்று வட கிழக்கு மாநிலத்தவர்களிடம் கூறினார். இன்று பிரிவினைவாதம் பற்றி எந்த விவாதமும் அங்கு இல்லை.
இங்குள்ள மாணவர்களாகிய நீங்கள் படித்து முடித்தவுடன் வடகிழக்கு மாநிலத்திற்குச் செல்ல வேண்டும். தமிழ்நாட்டில், 1 கோடியே ஐம்பது லட்சத்திற்கும் அதிகமானோர் முத்ரா திட்டத்தில் நிதியுதவி பெறுகின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள், முத்ரா நிதியுதவின் மூலம் அவர்க்ற செய்யும் அற்புதங்களை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் கண்ணியத்துடன் வாழ்கிறார்கள்.
உங்கள் கல்விக்குப் பிறகு நீங்கள் அங்கு சென்று , ஒரு தொழில்முனைவோராக மாற வேண்டும் என எனது இளம் நண்பர்களை (மாணவர்களை) நான் கேட்டுக்கொள்கிறேன். வடகிழக்கு பற்றிய பழைய கதைகளை ஒதுக்கித் தள்ளுங்கள், அது கட்டமைக்கப்பட்ட மேற்கத்திய கதை. என்று கூறினார்.