விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி ஒரு பொருட்டே இல்லை.. சசிகலா சினிமா ஓட்டுகிறார்... புகழேந்தி காட்டம்!

விஜய், பழனிசாமியை ஒரு பெருட்டாகவே நினைக்கவில்லை, பழனிசாமி மீண்டும் பாஜகவின் காலில் விழுந்து சரணடையும் நிலைக்கு வந்துள்ளார் என அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Nov 12, 2024 - 08:36
 0
விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி ஒரு பொருட்டே இல்லை.. சசிகலா சினிமா ஓட்டுகிறார்... புகழேந்தி காட்டம்!
விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி ஒரு பொருட்டே இல்லை.. சசிகலா சினிமா ஓட்டுகிறார்... புகழேந்தி காட்டம்!

தஞ்சையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சியினர் என அனைவரும் ஒன்று சேர்ந்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என முடிவு செய்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், தற்போது ஒருமித்த கருத்துகள் இருந்தால் கூட்டணி வைத்துக்கொள்ள தயார் என்கிறார். பழனிசாமி தெரிந்து, புரிந்துதான் பேசுகிறாரா? என தெரியவில்லை. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் ஒற்றை காலி நின்று வருகிறார்கள். ஜெயக்குமார் ஒன்றுக்கும் உதவதவராகக் கத்திக்கொண்டு இருக்கிறார். யார் பழனிசாமியை தேடி கூட்டணிக்கு வருகிறார்கள்? 

நாங்கள் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளோம் என்பதால்தான், விஜய் எங்களை பற்றி பேசவில்லை என பழனிசாமி கூறி வருகிறார். ஆனால் உண்மை அது இல்லை! விஜய் பழனிசாமியை ஒரு பெருட்டாகவே நினைக்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை. பழனிசாமி யாரை ஏமாற்ற நினைக்கிறார்? பழனிசாமி மீண்டும் பாஜகவின் காலில் விழுந்து சரணடையும் நிலைக்கு வந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் பழனிசாமிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பழனிசாமி முதல்வராக இருந்தபோது, பல்வேறு துறைகளை தனது கையில் வைத்து இருந்தார். வேறு நபர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை? ஏன் பிறருக்கு பதவியை கொடுக்கவில்லை? ஏன் உதயநிதியை பற்றி பேச வேண்டும்? பழனிசாமி விஜய் காலில் விழ கூட தயாராக உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் மறைந்த விஜயகாந்தின் அனுதாபதிற்காக 20 சதவீதம் வாக்கு கிடைத்தது.   

பழனிசாமியுடன் யாரும் கூட்டணிக்கு வரமாட்டார்கள். உள்கட்சியில் உள்ளவர்களை பழனிசாமி சேர்த்துக்கொள்ள முடியாது என தகராறு செய்துக்கொண்டு இருந்தால் யார்தான் அவருடன் கூட்டணிக்கு வருவார்கள்? மத்திய அரசை பார்த்து பழனிசாமி பயப்பட ஆரம்பத்ததன் விளைவு பாஜகவுடன் சரணடைந்துள்ளார். அதிமுகவை ஒருங்கிணைக்க பழனிசாமியிடம் பலமுறை கேட்டோம். ஆனால் பதவிக்கு கொண்டு வந்த சசிகலா மற்றும் ஓபிஎஸ்-ஐ சேர்க்க மாட்டேன் என ஒரே பதில் கூறிவிட்டார். அதிமுகவை ஒருங்கிணைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு குறைந்து விட்டது. அந்த நம்பிக்கை பழனிசாமியால் போய்விட்டது. 

அதிமுக இன்றைக்கு ஒன்றும் இல்லாமல் யாராவது கூட்டணிக்கு வருவார்களா என்கிற அளவுக்கு தேய்ந்து விட்டது. அதிமுகவை இணைக்க முடியாவிட்டால் நான் மக்களிடம் மன்னிப்பு கேட்பேன். அதிமுக இணைப்புக்கு பழனிசாமிதான் தடையாக உள்ளார். சசிகலா ஒரு சினிமா ஓட்டிக்கொண்டு இருக்கிறார். வெளியில் வரும்போது எல்லாம் அதிமுகவை சேர்த்து வைப்பேன் என பேச்சு மட்டும்தான். அதிமுகவுக்கு ஒரு கஷ்டமான நிலை உருவாகியுள்ளது. எப்படி அதிமுக மீண்டு வர போகிறது எனத் தெரியவில்லை” என வேதனை தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow