ஈ.டி. ரெய்டால் பரபரப்பான சென்னை.. சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரால் அதிரடி
தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வெளிநாடுகளில் முதலீடு உள்ளிட்டப் புகார்களின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை சின்னமலை IDG சாலையில் உள்ள OPG Power & Infrastructure பிரைவேட் லிமிடெட் என்ற சோலார் பேனல் தயாரிக்கும் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு சி.ஆர்.பி.எஃப். உதவியுடன் ஐந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அரவிந்த் குப்தா என்பவரின் வீட்டில் ஒரு சி.ஆர்.பி.எப். காவலர் உதவியுடன் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும், தேனாம்பேட்டை கேபி தாஸ் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கௌஷிக் சோலார் கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்தி வரும், கௌசிக் என்பவரின் வீட்டில் 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வருகிறார்.
சென்னை அடையாறு கிரீன் வேஸ் சாலை பிஷப்கார்டன் பகுதியில் வசித்து வரும் தொழில் அதிபர் உமேஷ் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டனர். தவிர, சென்னை பரங்கிமலை, உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களில் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?