அரசியல்

TVK Vijay: “தூங்கு மூஞ்சிப்பூ... தவெக கட்சி கொடி விளங்குமா..? விஜய்யை பங்கமாக கலாய்த்த நாசர்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார். இந்த கொடி குறித்து திமுக எம்எல்ஏ ஆவடி நாசர் கடுமையாக விமர்சித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

TVK Vijay: “தூங்கு மூஞ்சிப்பூ... தவெக கட்சி கொடி விளங்குமா..? விஜய்யை பங்கமாக கலாய்த்த நாசர்!
தவெக விஜய்யை விமர்சித்த ஆவடி நாசர்

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோ விஜய் சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் களமிறங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், 2026 தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதார். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியையும், கொடிப் பாடலையும் விஜய் கடந்த வாரம் அறிமுகம் செய்தார். சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஜய்யின் அப்பா, அம்மா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.      

தவெக கொடியின் மேலேயும் கீழேயும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் இடம்பெற்றிருந்தது. அதேபோல், நடுவில் வாகை மலரை இரண்டு போர் யானைகள் வணங்குவது போன்றும் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், வகை மலரை சுற்றிலும் 28 நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், 23 நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தவெக கொடியை அறிமுகம் செய்து வைத்த விஜய், அதுபற்றியும் அதில் இடம்பெற்றுள்ள குறியீடுகள் குறித்தும் விளக்கம் கொடுக்கவில்லை. 

ஆனால், தவெக கொடியின் பின்னால் வரலாறு இருப்பதாகவும், அதுபற்றி விரைவில் சொல்கிறேன் என்றும் விஜய் கூறியிருந்தார். அதேநேரம் தவெக கொடி வெளியான சில மணி நேரங்களிலேயே அதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்யத் தொடங்கினர். அதாவது தவெக கொடியில் உள்ள போர் யானைகள், ஃபெவிக்கால் லோகோ போல இருப்பதாக கலாய்த்து வந்தனர். அதேபோல், திமுக, அதிமுக கொடிகளை யாராலும் எளிதாக வரைந்துவிட முடியும். ஆனால், தவெக கொடி அப்படி எளிமையாக இல்லை. மேலும் இந்த கொடியில் இருக்கும் குறியீடுகள் எல்லாம் பொதுமக்களுக்கு புரியவே புரியாது என விமர்சித்திருந்தனர்.  

மேலும் படிக்க - “நகைச்சுவையை பகைச்சுவை ஆக்கிடாதீங்க”: துரைமுருகன்! 

இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி குறித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆவடி நாசர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் ஆவடி நாசர் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர், சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள், முதலமைச்சர் ஆகிறேன் என அரசியலுக்கு வந்து விடுகின்றனர். முதலமைச்சராக ஆவதெல்லாம் அவ்ளோ ஈஸி என நினைத்துவிட்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் மேலே குங்கும பொட்டு, கீழே சந்தனப் பொட்டு, நடுவில் தூங்கு மூஞ்சிப்பூ இருக்கிறது, இது விளங்குமா எனவும் ஆவடி நாசர் காட்டமாக விமர்சித்தார். 

ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வருவது திமுகவுக்கு எதிராக தான் என ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. அதாவது உதயநிதிக்கு போட்டியாக விஜய் களமிறங்குகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தவெக கொடி அறிமுகமான நாளில் அதுகுறித்து உதயநிதியிடம் கேட்ட போது, நான் அந்நிகழ்ச்சியை பார்க்கவில்லை, விஜய்க்கு வாழ்த்துகள் என கூறியிருந்தார் உதயநிதி. அதேபோல், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் விஜய்யின் தவெக கொடியை பறக்கும் போது பார்த்துக்கொள்கிறேன் என தக் லைஃப் கொடுத்திருந்தார். இப்போது ஆவடி நாசர் பங்கமாக இறங்கி சம்பவம் செய்து, விஜய் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளார்.