"எத்தனை பெரியார், கலைஞர் வந்தாலும் திருத்த முடியாது.." மகாவிஷ்ணு விவகாரம்..காட்டமாக பேசிய எம்.பி

நம் பிள்ளைகளை படிக்கவைத்து அறிவாளியாக மாற்ற பள்ளிக்கு அனுப்பினால் ஒரு சிலர் நம் பிள்ளைகளுக்கு  மூடநம்பிக்கை செலுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இவர்களை எத்தனை பெரியார், கலைஞர் வந்தாலும் திருத்த முடியாது என திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசியுள்ளார்.

Sep 8, 2024 - 21:45
Sep 9, 2024 - 10:55
 0
"எத்தனை பெரியார், கலைஞர் வந்தாலும் திருத்த முடியாது.." மகாவிஷ்ணு விவகாரம்..காட்டமாக பேசிய எம்.பி

நம் பிள்ளைகளை படிக்கவைத்து அறிவாளியாக மாற்ற பள்ளிக்கு அனுப்பினால் ஒரு சிலர் நம் பிள்ளைகளுக்கு  மூடநம்பிக்கை செலுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இவர்களை எத்தனை பெரியார், கலைஞர் வந்தாலும் திருத்த முடியாது என , திமுக எம்.பி தயாநிதி மாறன்  பேசியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் சேப்பாக்கம் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இவ்விழாவில்  சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்துகொண்டு மேடையில் பேசினார். 

ஆவர் கூறியதாவது, “முதலமைச்சர் அமெரிக்கா சென்ற பிறகு அனைத்து முதலீட்டாளர்களும் முதலமைச்சரை சந்தித்து நாங்கள் உங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கிறோம் என்று சொல்கின்றனர். இதனால் நம் மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்து உள்ளது. ஆனால் 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்து ஏதாவது ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தீர்களா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “சமீபத்தில் அரசு பள்ளியில் ஆன்மீகம் பற்றி பேசி சர்ச்சையான நிகழ்வு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது என்னவென்றால் இப்போது நீங்கள் கஷ்டப்பட்டால் போன ஜென்மத்தில் நீங்கள் செய்த பாவம் என்று கூறுகிறார்கள். நாம் நம் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினால், ஒரு சிலர் நம்மை பின்னுக்கு தள்ளும் வேலையை பார்த்து வருகின்றனர். இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது” என அவர் கூறினார்.

மேலும் படிக்க: விஜய்யால் நல்லது நடந்தால் சந்தோசம்.. மாநாட்டில் எதிர்பார்க்கிறேன் - துரை வைகோ

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவிலேயே மாவட்டம் தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி, ஒரு பொறியியல் கல்லூரி, ஒரு அரசு கலை கல்லூரி என அரசு நிறுவியது என்று கூறினால் அது தமிழ்நாட்டில் மட்டும்தான். பிற மாநிலங்களில் கிடையாது. அது மட்டுமல்ல ஆணுக்கு,பெண் நிகர் என சட்டம் வகுத்தது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆட்சி காலத்தில் தான், என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow