தமிழ் சினிமாவில் மீண்டும் சோகம்... பிரபல இயக்குநர் திடீர் மறைவு..!

பிரபல இயக்குனர் சுரேஷ் சங்கையா, உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு  திரையுலகில் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nov 16, 2024 - 22:50
Nov 16, 2024 - 23:07
 0
தமிழ் சினிமாவில் மீண்டும் சோகம்... பிரபல இயக்குநர் திடீர் மறைவு..!
தமிழ் சினிமாவில் மீண்டும் சோகம்... பிரபல இயக்குநர் திடீர் மறைவு..!

இயக்குனர் சுரேஷ் சங்கையா (40)  மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சென்னை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று (நவம்பர் 15) இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொந்த ஊராக கொண்ட சுரேஷ் சங்கையாவிற்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

விதார்த் நடிப்பில் வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு', திரைப்படம் சுரேஷ் சங்கையாவிற்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து பிரேம்ஜி நடிப்பில் வெளியான 'சத்திய சோதனை' இயக்கினார்.  தற்போது,  யோகிபாபு நடிப்பில், "கெணத்த காணோம்' என்ற படத்தை இயக்கி வந்த சுரேஷ் சங்கையா, அப்படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவே உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  'கெணத்த காணோம்' படத்தை ஜெகன் பாஸ்கரனின் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் எஸ்.ஆர். ரமேஷ் பாபுவின் ஆர்பி டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

இந்தப் படத்தில் ஜார்ஜ் மரியான், ரேச்சல் ரெபேக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வந்ததாகவும், விரைவில் ஓடிடி தளத்தில் வெளியீட்டுக்கு தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களத்தில், திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் பாராட்டை பெற்றவர். கிராமத்து பிண்ணியில் திரைப்படங்களை இயக்கி வந்த சுரேஷ் சங்கையா காக்கா முட்டை திரைப்பட இயக்குநர் மணிகண்டனின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.  

இந்நிலையில் மஞ்சள் காமாலை நோயின் தாக்கம், கிட்னி பிரச்னை ஆகியவற்றால் இவர் இறந்துள்ளார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகும். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

சுரேஷ் சங்கையா கடந்த ஒரு மாதமாக மஞ்சள் காமாலை நோய் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கல்லீரல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர் சிகிச்சையில் இருந்த வந்த சுரேஷ் சங்கையா நேற்று  இரவு 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் இந்த திடீர் மறைவு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மறைவுக்கு திரையுல பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow