“ரஜினி எடுத்த முடிவு தப்பு... பாட்ஷா மூவி கெத்தா இருக்காது..” அதிரடி காட்டிய அல்போன்ஸ் புத்திரன்!

நேரம், பிரேமம் படங்களின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் குமுதம் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்தார். அதில், ரஜினி குறித்து பேசியிருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Jul 9, 2024 - 21:05
Jul 9, 2024 - 22:58
 0
“ரஜினி எடுத்த முடிவு தப்பு... பாட்ஷா மூவி கெத்தா இருக்காது..” அதிரடி காட்டிய அல்போன்ஸ் புத்திரன்!
அல்போன்ஸ் புத்ரன்

சென்னை: நிவின் பாலி, நஸ்ரியா நஸிம், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் நேரம். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன், அடுத்து மெகா ப்ளாக் பஸ்டர் ஒன்றை இயக்கினார். நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்ரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியான பிரேமம் மூவி தான் அது. சேரன் இயக்கி நடித்து தமிழில் வெளியான ஆட்டோகிராப் படத்தின் அப்டேட் வெர்ஷனாக உருவாகியிருந்தது பிரேமம். ஆனால் ஆட்டோகிராப் படத்தை விடவும் பிரேமம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இன்று பான் இந்தியா நடிகையாக வலம் வரும் சாய் பல்லவிக்கு, பிரேமம் படத்தின் மலர் டீச்சர் கேரக்டர் தான் மிகப் பெரிய அறிமுகம் கொடுத்தது. பிரேமம் ஹிட்டுக்குப் பின்னர் அல்போன்ஸ் புத்ரன் மூவி எப்போது வரும் என ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்யத் தொடங்கினர். ஆனால், கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பின்னர் அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் திரைப்படம் கடந்தாண்டு ரிலீஸானது. ஆனால் படம் எதிர்பார்த்ததில் பாதியளவு கூட ஹிட்டாகவில்லை. பிருத்விராஜ், நயன்தாரா என பெரிய ஸ்டார் காஸ்டிங் இருந்தும் மொக்கை வாங்கியது. கோல்ட் படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், ரொம்பவே அப்செட் ஆன அல்போன்ஸ் புத்ரன், இனி படங்கள் இயக்கவில்லை எனவும் அறிவித்தார். 

இந்த நிலையில் தான் குமுதம் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, கண்டிப்பாக மீண்டும் படம் இயக்குவேன் எனக் கூறிய அல்போன்ஸ் புத்ரன், ரஜினி, அஜித் இருவரும் இணைந்து நடிக்க ஒரு கதை வைத்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல், தமிழில் ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ் அனைவரும் இணைந்து மல்டி ஸ்டார்ஸ் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டால், பாகுபலி எல்லாம் ஒன்றுமே இல்லை எனவும் கூறினார். மேலும் ரஜினி மாஸ் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் முள்ளும் மலரும், ஜானி போன்ற படங்களிலும் நடிக்க வேண்டும். உண்மையாக சொன்னால் முள்ளும் மலரும் காளி கேரக்டரில் இருக்கும் வெயிட் கூட, பாட்ஷாவில் இருக்காது. 
   
முக்கியமாக முள்ளும் மலரும் க்ளைமேக்ஸ் அவ்ளோ மாஸ்ஸாக இருக்கும். ரஜினி மீண்டும் அதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டும். மாஸ் படங்களில் மட்டுமே நடிக்கலாம் என ரஜினி முடிவெடுத்தது தவறான முடிவு எனவும் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார். முன்பு ஒருமுறை எனக்கு ரஜினியை பிடிக்காது என செய்தி வெளியாகியிருந்தது. ஆனால், அது உண்மையில்லை, அப்போதும் என்னிடம் ரஜினிக்காக கதை இருந்தது. இப்போதும் ரஜினியை மனதில் வைத்து சில கதைகளை எழுதி வைத்துள்ளேன். அதில் ஒரு ஸ்க்ரிப்ட் ரஜினியும் அஜித்தும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்றுள்ளார். இதனிடையே மீண்டும் படம் இயக்குவேன் எனக் கூறிய அல்போன்ஸ் புத்ரன், விரைவில் அதுபற்றி அப்டேட் வரும் என தெரிவித்தார்.   

சாண்டி மாஸ்டர், கோவை சரளா ஆகியோர் நடிப்பில் கிஃப்ட் என்ற படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால், அதன்பின்னர் கிஃப்ட் படத்தின் ஷூட்டிங் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், குமுதம் பேட்டியில் மீண்டும் இயக்குநராக களமிறங்குவேன் என அவர் தெரிவித்துள்ளதால், அது கிஃப்ட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow