Jailer2: சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணையும் தனுஷ்... ஜெயிலர் 2 சம்பவம் தரமா இருக்கும்... மாஸ் அப்டேட்
நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2ம் பாகத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தசெ ஞானவேல் இயக்கிய வேட்டையன் திரைப்படம், கடந்த 10ம் தேதி ரிலீஸானது. வேட்டையனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கூலி ஷூட்டிங் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து ரஜினியின் அடுத்தப் படம் என்ன? யார் இயக்குநர்? என்பது தான் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. மணிரத்னம், மாரி செல்வராஜ், வெங்கட் பிரபு ஆகியோரது பெயர்கள் லிஸ்ட்டில் இருந்தாலும், நெல்சனுக்கு தான் வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது.
தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வந்த ரஜினிக்கு, ஜெயிலர் மூலம் வெறித்தனமான கம்பேக் கொடுத்தது இயக்குநர் நெல்சன் தான். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்தாண்டு வெளியான ஜெயிலர், இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. பக்கா கமர்சியல் மூவியாக உருவான ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய் வரை வசூலித்தது. முக்கியமாக இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா கேமியோ ரோலில் நடித்திருந்தனர். அதேபோல் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தனர்.
ஜெயிலர் வெற்றியை பார்த்து மீண்டும் நெல்சனுக்கு ஒரு படம் இயக்க வாய்ப்புக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார். அதன்படி ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ள நெல்சன், இதிலும் பான் இந்தியா நடிகர்கள் சிலரை கேமியோவாக நடிக்க வைக்க பிளான் செய்துள்ளாராம். இன்னொரு பக்கம் ரஜினியுடன் தனுஷையும் நடிக்க வைக்க நெல்சன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது, ஜெயிலர் 2ம் பாகத்துக்கு செம ஹைப் கொடுத்துள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகன் வசந்த் ரவி கேரக்டரில் முதலில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றன. அப்போது தனுஷும் அந்த ரோலில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தாராம்.
அப்போது தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததால், ஜெயிலர் படத்தில் அவரது கனவு நிறைவேறாமல் போனது. ஜெயிலர் மட்டுமில்லாமல் அதற்கு முன்பும் ரஜினியின் சில படங்களில் அவருடன் நடிக்க முயற்சிகள் எடுத்திருந்தார் தனுஷ். இதுவரை தனுஷின் ஆசை நிறைவேறாமல் இருந்த நிலையில், தற்போது ஜெயிலர் 2ம் பாகத்தில் அதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
ஜெயிலர் 2ம் பாகத்தில் தனுஷை நடிக்க வைக்க நெல்சன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், ரஜினி அதற்கு க்ரீன் சிக்னல் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனிடையே தனுஷ் – ஐஸ்வர்யா இருவருமே அவர்களது விவாகரத்து வழக்கில் இன்னும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் மீண்டும் சேரலாம் என முடிவு செய்துள்ளதாகவும், சீக்கிரமே இதுபற்றி அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
What's Your Reaction?