தமிழ்நாடு

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு.. நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் காரணம் வழங்க காரணம் என்ன?

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு.. நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் காரணம் வழங்க காரணம் என்ன?
நடிகை கஸ்தூரி

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி சிறப்பு குழந்தை உள்ள காரணத்தினால், அவருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனம் தெரிவிக்காத நிலையில், ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில இந்திய தெலுங்கு சம்மேளணம் அமைப்பினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் நடிகை கஸ்தூரி மீது இரு பிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அளிக்க அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவானதால் இரண்டு தனிப் படைகள் அமைத்து நடிகை கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில், அதனை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனால் நடிகை கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள் ஹைதராபாத் மற்றும் ஆந்திராவில் முகாமிட்டு தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று ஹைதராபாத் புப்பல்குடாவில், சினிமா தயாரிப்பாளர் (ஹரி) என்பவரின் வீட்டில் தலைமறைவாக  இருந்தபோது நடிகை கஸ்தூரி போலீசார் கைது செய்தனர். 

தெலுங்கு மக்களை இழிவாக பேசியதாக நடிகை கஸ்தூரியை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த கஸ்தூரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.  இந்த நிலையில் ஜாமீன் மனுவில் நடிகை கஸ்தூரி தான் சிங்கிள் மதர் எனவும் தனக்கு சிறப்பு குழந்தை இருப்பதாகவும் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரியிருக்கிறார்.

இந்நிலையில், மீண்டும் நடிகை கஸ்தூரி தான் சிங்கிள் மதர், தன்னுடைய சிறப்பு குழந்தையை கவனிக்க வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு  காவல் துறை சார்பில் ஆட்சேபனம் தெரிவிக்காத நிலையில், சென்னை எழும்பூர் நீதிமன்றம் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.