இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தில் விஜய்க்கு பாதுகாப்பு.. பத்திரிக்கையாளருக்கு மிரட்டல் விடுத்த போலீஸ்..

14 வருடங்களாக இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தில் சென்று விஜய்க்கு பாதுகாப்பு அளித்ததுடன், பத்திரியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த காவல் ஆய்வாளருக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.

Aug 22, 2024 - 18:31
Aug 22, 2024 - 18:36
 0
இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தில் விஜய்க்கு பாதுகாப்பு.. பத்திரிக்கையாளருக்கு மிரட்டல் விடுத்த போலீஸ்..

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைமை நிலைய செயலகத்தில், கட்சிக்கொடி அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், கட்சி கொடியை ஏற்றி பாடலை வெளியிடுவதற்காக, நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிலிருந்து காலை 8:55 மணியளவில் பனையூர் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, விஜய் வீடு உள்ள நீலாங்கரை கேஷ்சுரீனா டிரைவ் தெருவின் இருபுறங்களிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து வழக்கத்துக்கு மாறாக கெடுப்பிடியாக நடந்து கொண்டனர். குறிப்பாக,  தினமும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பால் பாக்கெட் மற்றும் பேப்பர் போடும் சிறுவனை கூட விசாரித்து அனுப்பினர்.

அந்த பகுதியில் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நபர்களையும், கட்டட வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளர்களை கூட காவல்துறையின் அனுமதிக்க வில்லை. ஊடகத்தினரையும் விஜய் வீட்டிற்கு அருகே செல்லவிடமால் தடுத்தி் நிறுத்தினர். காவல்துறையின் இந்த கெடுபிடியால், முதல்வர் வருவது போன்று அந்த பகுதியில் இருந்தது.

சட்டத்திட்டங்களை முறையாக கடைப்பிடிப்பது போல் நடந்து கொண்ட நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்த டாடா சுமோ வாகனம் எண்: TN01 G 4493. இந்த, வாகனத்தின் இன்சூரன்ஸ் கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதியுடன் முடிந்துள்ளது. காரின் ஆயுட்காலம் 2024 மார்ச் 3ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது.

இந்த வாகனத்தில் வந்து தான் போலீசார் மீடியாக்களின் வாகனத்தை இடிப்பது போல் வந்து தடுத்து நிறுத்தினர். குறிப்பாக இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் என்பவர். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்து ஊடகத்தினர் வந்த வழியில் தடுப்புகள் அமைத்து, விஜயின் காரை பின் தொடர விடாமல், தடுத்ததுடன் பொதுமக்கள் பயணித்த ஈசிஆர் சாலையில் சிக்னலை நிறுத்தி நடிகர் விஜய் கார் சென்றபிறகு, பொதுமக்களுன் வாகனங்களுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டது.

ஊடகத்தினரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், அவர்களிடம் ஒருமையாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இவருடைய செயல்பாடுகள் அனைத்தும் நடிகர் விஜய்க்கு தனியார் செக்யூரிட்டி அலுவலராக வந்ததைப் போலவும், நடிகர் விஜயின் ரசிகரை போலவும் இருந்ததாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

போக்குவரத்து காவல்துறை சார்பில் ‘ஜீரோ ஆக்சிடென்ட்’ என பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தாலும், ஒரு காவல் ஆய்வாளர் உபயோகப்படுத்தக்கூடிய வாகனம் 14 ஆண்டுகளாக இன்சூரன்ஸ் கட்டாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வண்டியின் ஆயுட்காலம் முடிந்தும் அதை அவர் எப்படி இயக்கினார் என்ற கேள்வி அனைவரும் மத்தியில் இருந்து உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow