தமிழ்நாடு

சென்னையில் கட்டுப்பாட்டு அறை ரெடி!.. எந்த ஏரியாவில் யாரை தொடர்பு கொள்ளலாம்? - முழு விவரம்

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை மற்றும் 12 காவல் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கட்டுப்பாட்டு அறை ரெடி!.. எந்த ஏரியாவில் யாரை தொடர்பு கொள்ளலாம்? - முழு விவரம்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தடுக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தலைமை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 12 காவல் மாவட்டத் துணை ஆணையர் அலுவலகத்தில் 12 கட்டுப்பாட்டு வரை அமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இது மட்டுமின்றி தாழ்வான மற்றும் பாதிப்புக்குள்ளான இடங்களில் 35 கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து பொதுமக்கள் மற்றும் ஒருங்கிணைந்த பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்பு கொள்வதற்கு வசதியாக பிரத்யேக எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

பூக்கடை காவல் மாவட்டம் மண்ணடி காவலர் குடியிருப்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் கோபால் 94454 90684,  காமாட்சி 97400 31681, கார்த்திக்ராஜா 90434 42929 ஆகியோரை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். 

பூக்கடை காவல் மாவட்டத்திற்குட்பட்ட அம்மன் கோயில் தெரு பிரகாசம் சாலை சந்திப்பு,  வால்டாக்ஸ் ரோடு சந்திப்பு, மண்ணடி மெட்ரோ பிரகாசம் சாலை, லோன்ஸ்கொயர் பிரகாசம் சாலை, எஸ்பிளனேடு காவல் நிலையம், ஆசிர்வாதபுரம், மண்ணடி எக்ஸ்லண்ட் ஓட்டல் பிரகாசம் சாலை, சவரி முத்து தெரு, தாதா முத்தையப்பன் தெரு, சின்னதம்பி தெரு சந்திப்பு, சவரி முத்து தெரு, சின்னதம்பி தெரு சந்திப்பு, மூர் தெரு ஆகியவ தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

இதே போல, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் 5-வது மண்டல அலுவலகம், குழந்தைகள் நல மையம் (பாரத் தியேட்டர் அருகில்), புது சுராங்குடி கல்யாண மண்டபம் ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளர்கள் மனோகரன் 94981 44470, கார்த்திகேயன் 94981 33646, சாந்தகுமார் 94441 33436, குமார் 94981 41304, பாக்யராஜா 9566277333, ரபிராஜன் 94981 41668, பாலசுந்தரம் 80560 56260, சசிகுமார் 94442 16883 ஆகியோர் கட்டுப்பாட்டு அறையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் மூலக்கொத்தளம், கண்ணன் ரவுண்டானா, பனை மரத்தொட்டி, கன்னிகாபுரம் ஆகிய பகுதிகள் தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கான கட்டுப்பாட்டு அறை சமுதாயநலக்கூடம் அங்களாம்மன் கோயில் தெரு, சத்திய மூர்த்தி நகர் & டாக்டர் அம்பேத்கர் உதய சூரியன் நகர் கல்லூரி, எருக்கஞ்சேரி ஹைரோடு, சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஸ்கூல் ரோடு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ளது. காவல் உதவி ஆய்வாளர்கள் ஸ்டீபன், கிருஷ்ணகுமார், வெங்கடேஷ்வரன்- 73055 68925, காசிநாதன், நாதமுனி, சுரேஷ்- 7548899151, ரகு, வேல்முருகன்,  கிருஷ்ணன் - 80568 46652 ஆகியோர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

கன்னிகாபுரம், சமுதாய நலக்கூடம் அங்களாம்மன் கோயில் தெரு, சத்திய மூர்த்தி நகர் & உதய சூரியன் நகர், சின்ன குழுந்தை தெரு. சென்னை வியாசர்பாடி ஆகிய பகுதிகள் தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இதே போல 12 காவல் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் கண்டறிந்து கட்டுப்பாட்டு அறை  அமைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையின்போது, கனமழை, புயல், வெள்ளம், சூறாவளி காற்று என இயற்கை பேரிடர் ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பிற்கு இடர் ஏற்பட்ட இடம் தேடி உதவிகள் செய்வதற்காகவும், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளவும், சென்னை பெருநகர காவல், 12 காவல் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் (District Disaster Response Teams) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மீட்பு குழுவும் ஒரு தலைமைக்காவலர் தலைமையில் 10 காவலர்கள் இருப்பர். ஒவ்வொரு மீட்பு குழுவுக்கும் மீட்பு பணிகளுக்காக தலா ஒரு வாகனம் என 12 வாகனங்களும், ரப்பர் படகு, மிதவை ஜாக்கெட்டுகள், கயிறு, உட்பட 21 மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்பு குழுவில் உள்ள காவல் ஆய்வாளர்களுக்கு தனித்துவமான ஜாக்கெட்டுகள் (Distinctive Jackets) வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மீட்பு குழுவினருக்கும் நீச்சல் மற்றும் மீட்பு பணிகளுக்கான பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மழைநீர் தேங்கி போக்குவரத்து இடையூறு உள்ள சுரங்கபாதைகள் மற்றும் சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைத்தும், மைக் மூலம் எச்சரிக்கை விடுத்தும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லாதவாறு தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்காலிக கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டு, அவசர உதவி எண்களுடன் 24 மணி நேரம் சுழற்சி முறையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுப்பணித் துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அரசு துறைகளுடன் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.