மூடப்பட்ட சென்னை விமான நிலையம்.. நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஃபெங்கல் புயல் காரணமாக, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, சென்னை விமான நிலையம் சுமார் 12 அரை மணி நேரத்திற்கு பின் செயல்பட தொடங்கியது.

Dec 1, 2024 - 09:17
 0
மூடப்பட்ட சென்னை விமான நிலையம்.. நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
செயல்பட தொடங்கியது சென்னை விமான நிலையம்

முதல் விமானம் குவைத்திற்கு அதிகாலை 5.18 மணிக்கு புறப்பட்டது. எனவே விமான பயணிகள், தாங்கள் பயணம் செய்ய இருக்கும், விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் எப்போது புறப்படும் என்பதை கேட்டு அறிந்து கொண்டு, பயணிகள் சென்னை விமான நிலையத்திற்கு வரும்படி அறிவிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ஃபெஞ்சல் புயல் காரணம் நேற்று காலை 9 மணி முதல் விமான நிலையம் மூடப்பட்டது. அதிகாலை 4 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களின் மேலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில், புயல் கரையைக் கடந்து, வானிலை சீரடைந்து விட்டதால் விமானனங்களை இயக்கப்படலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு 3 மணி நேரத்துக்கு முன்னதாகவே, சென்னை விமான நிலையம் நள்ளிரவு 1 மணிக்கு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. விமான சேவைகள் நள்ளிரவு தொடங்கினாலும் முதல் விமானம் குவைத் நகருக்கு அதிகாலை 5.18 மணிக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் விமான சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வருகை மற்றும் புறப்பாடு என 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. திருப்பி விடப்பட்ட 20 விமானங்கள் மீண்டும் சென்னைக்கு வர தொடங்கி உள்ளன. விமான சேவை முழுமையாக சீராக ஒரு நாள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow