பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தமிழகம் திரும்புகிறார். லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பிலான படிப்பை மேற்கொள்ளச் சென்ற அண்ணாமலை, 3 மாத படிப்பு முடிந்து இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
தமிழகம் திரும்பும் அண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாமலையின் சொந்த ஊரான கரூரில் பாஜக நிர்வாகிகள் அவரை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.
அண்ணாமலையை வரவேற்கும் விதமாக "ஐ அம் பேக்", "நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" என்ற வாசகங்களுடன், பாஜக கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் மற்றும் மத்திய மாநகர தலைவர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டி அமர்க்களப்படுத்தி உள்ளனர்.
இந்த போஸ்டர்கள் கரூர் நகரம், தாந்தோணிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், ராயனூர், காந்திகிராமம் உட்பட பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.