சர்வதேச அரசியல் படிப்புக்காக கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்று மாதம் தங்கி சர்வதேச அரசியல் படிப்பை முடித்துவிட்டு இன்று தமிழகம் திரும்புகிறார்.
நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை திரும்ப திட்டமிட்டிருந்த அண்ணாமலை, புயலின் காரணமாக, இன்று மதியம் 12 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.
சென்னை விமான நிலையம் வந்த பிறகு அங்கிருந்து நேரடியாக கோவை சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மீண்டும் சென்னை தினமும் அண்ணாமலைக்கு நாளை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.