TVK Vijay: தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு... லொக்கேஷனை கன்ஃபார்ம் செய்த தவெக தலைவர் விஜய்!

கோலிவுட்டின் முன்னணி நடிகரான தளபதி விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள விஜய், அதன் முதல் அரசியல் மாநாடு எங்கு நடைபெறும் என்பது குறித்தும் முக்கியமான முடிவெடுத்துள்ளாராம்.

Aug 8, 2024 - 17:52
Aug 8, 2024 - 17:55
 0
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு... லொக்கேஷனை கன்ஃபார்ம் செய்த தவெக தலைவர் விஜய்!
விஜய்யின் தவெக முதல் மாநாடு

சென்னை: கோலிவுட்டின் டாப் 5 மாஸ் ஹீரோக்களில் தளபதி விஜய்யும் ஒருவர். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார் விஜய். 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக போட்டியிடவுள்ளதாகவும், அதனால் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக விஜய் அரசியலுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதனை உறுதி செய்த தளபதி விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார்.

தலைவராக தளபதி விஜய்யும், அக்கட்சியின் பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்தும் பொறுப்பேற்றுள்ளனர். கட்சியை அறிவித்த பின்னர் மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவை பிரம்மாண்டமாக நடத்தினார் விஜய். அப்போது நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் பேசியது பெரியளவில் மக்களிடம் கவனம் ஈர்த்தது. அதேபோல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தின் போதும் நேரடியாக களத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். இப்படி அடுத்தடுத்து அதிரடி காட்டி வரும் தளபதி விஜய், இப்போது கோட் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். 

இந்தப் படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளதால், விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக விஜய்யின் லியோ இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. விஜய்யின் ரசிகர்களும் அவரது கட்சி நிர்வாகிகளும் அதிகளவில் பங்கேற்பார்கள் என்பதால், பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. அதனால் கோட் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை மட்டுமே அனுமதிக்க பிளான் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க - ரசிகர்களுக்கு அதிர்ச்சி அப்டேட் கொடுத்த லைகா

அதேநேரம் கோட் திரைப்படம் வெளியானதுமே, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த விஜய் முடிவு செய்துள்ளாராம். கோட் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக, அதே மாதம் 25ம் தேதி தவெக மாநாடு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டை திருச்சியில் உள்ள பொன்மலை ஜி-கார்னர் திடலில் நடத்தவுள்ளாராம் விஜய். இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளார்களாம். அதேபோல், ஒட்டுமொத்தமாக மொத்தம் 10 லட்சம் தொண்டர்களை இந்த மாநாட்டில் பங்கேற்க வைக்க தவெக நிர்வாகிகள் தீயாய் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. 

திமுக, அதிமுக கட்சிகளுக்கு திருச்சியில் நடைபெறும் மாநாடு எப்போதுமே ரொம்ப சென்டிமென்ட்டாக அமைந்துள்ளது. அதாவது, 1956ம் ஆண்டு திமுகவின் இரண்டாவது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. திமுக தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என இந்த மாநாட்டில் தான் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யப்பட்டது. அதேபோல், அதிமுகவின் முதல் மாநில மாநாடு, பொதுக்குழு, முதல் பொதுக்கூட்டம் ஆகியவற்றை திருச்சியில் தான் நடத்தினார் எம்ஜிஆர். இதையெல்லாம் அடிப்படையாக வைத்து தான், விஜய்யும் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை திருச்சியில் நடத்த முடிவு செய்துள்ளாரா என கேள்விகள் எழுந்துள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow