Thaadi Balaji: “ரஜினி சார் பத்தி பேசினது பழைய வீடியோ... உண்மை என்னன்னா..?” தாடி பாலாஜி அடடே விளக்கம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசிய வீடியோ சர்ச்சையான நிலையில், அதுகுறித்து நடிகர் தாடி பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை: தமிழில் பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தாடி பாலாஜி. விஜய்யுடன் துள்ளாத மனமும் துள்ளும் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் தொலைக்காட்சி கேம் ஷோக்களில் பங்கேற்று வரும் அவர், இப்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதன் வெற்றிக்காக கோயிலில் சிறப்பு வழிபாடும் செய்திருந்தார். அதன்பின்னர் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார்.
மேலும், இனிமேல் தளபதி விஜய்யின் வெற்றிக்காக களத்தில் இறங்கி வேலை பார்ப்பேன் என சூளுரைத்த தாடி பாலாஜியை, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் கட்டம் கட்டி வெளுத்து வாங்கி வருகின்றனர். தவெகவில் இணைந்துவிட்டதால் விரைவில் எம்.எல்.ஏ அல்லது அமைச்சர் ஆகிவிடுவோம் என பகல் கனவு கண்டாரோ என்னவோ?. ஒரு யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து சர்ச்சையாக பேசியிருந்தார். அதாவது ரஜினியுடன் நடித்தவர்களால் அதன்பின்னர் அவரை சந்திக்கவே முடியாது. அவர் யாரையும் பார்க்க அனுமதிக்க மாட்டார் என்பதாக கூறியிருந்தார். அரசியலுக்கு வந்திருந்தாலும் அவரால் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்க முடியாது என்றும் பேசியிருந்தார்.
அதேநேரம், தளபதி விஜய் அப்படிப்பட்டவர் இல்லை என்றும், அவரை எப்போது வேண்டுமானலும் பார்க்க முடியும் என துதி பாடியிருந்தார். மேலும் விஜய் அரசியலுக்கு வருவது பற்றியும் அவர் தான் எதிர்கால தமிழகம் என்பதாகவும் ஒரேடியாக புகழ்ந்து பேசியிருந்தார். இதில் விஜய்யை பற்றி அவர் பேசியது கூட பரவாயில்லை, ஆனால் சூப்பர் ஸ்டாரை எப்படி தாழ்த்திப் பேசலாம் என சமூக வலைத்தளங்களில் தாடி பாலாஜியை சம்பவம் செய்து வந்தனர். ஏற்கனவே ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே நீண்ட நாட்களாக சூப்பர் ஸ்டார் டைட்டில் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருந்தது. சமீபத்தில் தான் இருவரும் சூப்பர்ஸ்டார் வாய்க்கா தகராறில் இருந்து அவர்களாகவே வெளியேறினர்.
இதனால் இருதரப்பு ரசிகர்களும் வெள்ளைக்கொடி பறக்கவிட்டு சமாதானம் ஆன நிலையில், தாடி பாலாஜி மீண்டும் கொளுத்திப் போட்டு வேடிக்கை காட்டினார். ஆனால் ரஜினி ரசிகர்கள் தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பை கண்டு மிரண்டுபோன தாடி பாலாஜி தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக-வில் எந்த பொறுப்பும் எதிர்பார்க்காமல் தளபதிக்காக கட்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறேன். ஆனாலும் நான் கட்சி பணிக்கு முன்பே சமூகப் பணிகளில் ஈடுபடுத்தி வந்தேன். இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து 7 ஆண்டுகளுக்கு முன்பு பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத் தன்மை பற்றி அனைவரும் அறிந்த பின்னர் அதைப்பற்றி பேசினால் வதந்திகளை தவிர்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தில் நான் சேரவில்லை, அனைத்து வதந்திகளுக்கும் நானே முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். தவெக மாநாட்டுக்குப் பின்னர் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
What's Your Reaction?