Vettaiyan Audio Launch: வேட்டையன் இசை வெளியீட்டு விழா... ரஜினியின் புகழ் பாடிய பிரபலங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய பிரபலங்கள் ரஜினி குறித்து நெகிழ்ச்சியாக பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

Sep 20, 2024 - 22:05
 0
Vettaiyan Audio Launch: வேட்டையன் இசை வெளியீட்டு விழா... ரஜினியின் புகழ் பாடிய பிரபலங்கள்!
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பேச்சு

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தசெ ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், இயக்குநர் தசெ ஞானவேல், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். வேட்டையனில் நடித்துள்ள அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில் இருவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.  

வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில், “என் மனைவி ரஜினி சார் ரசிகை. அவருடன் போட்டோ எடுத்தால் தான் ஃபர்ஸ்ட் நைட் என சொல்லிவிட்டார். இன்னும் போட்டோவும் எடுக்க முடியல. பர்ஸ்ட் நைட்டும் நடக்கல” என காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசியதை கேட்டு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அவரைத் தொடர்ந்து பேசிய வேட்டையன் பட ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர், “30 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் இணைந்து நடித்துள்ளனர். அந்த காட்சியை ஒளிப்பதிவு செய்தது மறக்க முடியாதது” என நெகிழ்ச்சியாக பேசினார். 

அதேபோல், எடிட்டர் பிலோமின் ராஜ், “நான் முதலில் பார்த்த படம் முரட்டுக் காளை. இப்போது வேட்டையன் படத்தில் ரஜினி சாருடன் பணிபுரிந்துள்ளேன், இந்தப் படத்தை 2 மாதங்களாக எடிட் செய்து வருவதாக தெரிவித்தார். அதனையடுத்து வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் நடிகை துஷாரா விஜயன் பேசினார். ”என் காரில் ரஜினி சாரின் வெற்றிக் கொடி கட்டு பாடல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். என் அப்பா முதன் முறையாக நான் நடித்துள்ள படத்தின் ஆடியோ லான்ச்சுக்கு வந்திருக்கிறார். என் கனவு நிறைவேறியது” என நெகிழ்ச்சியாக பேசினார். அதேபோல், வேட்டையன் படத்திற்காக முதல் நாள் முதல் ஷாட்டே ரஜினி சாருடன் தான், அன்றைக்கு எனக்கு ஃபீவர் வந்து விட்டது எனவும் துஷாரா விஜயன் பேசியது குறிப்பிடத்தக்கது.

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை ரித்திகா சிங், “இனி இப்படிப்பட்ட வாய்ப்பு என் வாழ்க்கையில் கிடைக்காது. ரஜினி, அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துவிட்டேன்” என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார். அதேபோல், தெருக்குரல் அறிவு பேசிய போது, “என் 24 வயதில் காலா படத்துக்காக முதலில் பாட்டு எழுதினேன். இப்போது வரை 100 பாடல்கள் எழுதிவிட்டேன்” என பெருமிதமாக கூறினார். பாடலாசிரியர் சூப்பர் சுப்பு பேசிய போது, “அடுத்து யாருக்கு பாடல் எழுத ஆசை என கேட்கிறார்கள். தலைவருக்கு மட்டுமே நான் பாடல் எழுத விரும்புகிறேன்” என்றார். 

“சின்ன பையன் வந்தால் கூட, செட்டில் மரியாதை கொடுத்து பேசுவார் ரஜினிகாந்த். வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் மூலம் 500 டான்சர்களுக்கு வேலை கிடைத்தது” என டான்ஸ் மாஸ்டர் தினேஷ் பேசினார். அதேபோல், ”தலைவருடன் வேட்டையன் படத்தில் நடித்துள்ளேன், அவருடன் படப்பிடிப்புக்கு விமானத்தில் அருகருகே அமர்ந்து சென்றதை மறக்கவே முடியாது” என ரக்ஷன் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை ரோகிணி, ”ரஜினியுடன் நடித்தபோது முதல் நாளில் எனக்கு டயலாக்கே வரலை. இது எல்லாருக்கும் நடக்குதுறது தான் என டைரக்டர் கூல் செய்தார். அப்போ நீங்க என் கூட நடிக்க மாட்டீங்க... கமலுடன் தான் நடிப்பீங்கன்னு ரஜினி கலாய்த்தார். ஒரு சீனில் நடிக்கும் முன்னர் எப்படி பார்க்க வேண்டும் என பல முறை ரிகர்சல் செய்து பார்க்கிறார் ரஜினி. அதுதான் அவர் வெற்றிக்கு காரணம்” எனக் கூறினார்.  

அதேபோல், நடிகை அபிராமி பேசிய போது, “நான் கமல்ஹாசன் ரசிகைன்னு எல்லாருக்கும் தெரியும். இந்த படத்துக்குப் பின் ரஜினி ரசிகை ஆகிவிட்டேன். என் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்காக இப்படி எனர்ஜியாக வேலை செய்கிறேன் என ரஜினி என்னிடம் சொன்னார்” என கூறினார். அதன் பின்னர் பேசிய தெலுங்கு நடிகர் ராணா, “எனக்கு ரஜினிசார் ஹாஸ்பிட்டல்மேட், அந்த சிக்கலான காலக் கட்டத்தில் அவர் ஒரு மணி நேரம் பேசினார், என் வாழ்க்கையே மாறியது” என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow