சினிமா

35 Chinna Vishayam Illa OTT : ஓடிடியில் வெளியானது '35 சின்ன விஷயம் இல்ல'

35 Chinna Vishayam Illa OTT Release : நடிகை  நிவேதா தாமஸ் நடிப்பில், “35 சின்ன விஷயம் இல்ல” இன்று முதல் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.

35 Chinna Vishayam Illa OTT : ஓடிடியில் வெளியானது  '35 சின்ன விஷயம் இல்ல'
ஓடிடியில் வெளியான '35 சின்ன விஷயம் இல்ல'

35 Chinna Vishayam Illa OTT Release : நந்தா கிஷோர் எமானி இயக்கத்தில், நிவேதா தாமஸ் நடித்த 35 சின்ன விஷயம் இல்ல என்பது ரசிகர்களை கவர்ந்த மிகுந்த தாக்கமுள்ள குடும்பக் கதையாகும். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் தற்போது தமிழின் முன்னணி ஓடிடி தளமான SUN NXT-இல் ஸ்ட்ரீமாகிறது. 
 
ஒரு நடுத்தர குடும்பத்து இளம் தாய் தனது மகன் படிப்பில் திணறுகையில், அவனை பாஸ் மார்க்கான 35 மதிப்பெண்களைப் பெற வைக்க முயற்சிக்கிறாள்.  இது வீட்டின் இயல்பான வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. அந்த குடும்பம் சந்திக்கும் சவால்களும், அதைத் தீர்க்க அவர்கள் போராடுவதும், வெகு சுவாரஸ்யமான திரைக்கதையால் சொல்லப்பட்டுள்ளது. எளிய நடுத்தர வர்க்கம் தங்கள் வாழ்க்கையைத் திரையில் பார்க்கும்படி ஒரு அசத்தலான ஃபேமிலி டிராமாவாக  உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகள் மற்றும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
 
நடிகை நிவேதா தாமஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில்  பிரியதர்ஷி, விஸ்வதேவ் ரச்சகொண்டா, கௌதமி, பாக்யராஜ், கிருஷ்ண தேஜா, அருண் தேவ், அபய், அனன்யா  ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி  ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக  T C பிரசன்னா பணியாற்றியுள்ளார். பிரின்சி வைத்  காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை லதா நாயுடு செய்துள்ளார்.
 
ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை எதிர்நோக்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், இப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.