This Week OTT Release : GOAT முதல் BOAT வரை... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்!
This Week OTT Release Movie List : விஜய்யின் கோட், யோகி பாபு நடித்துள்ள போட் உள்ளிட்ட மேலும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த வார ஓடிடி ரிலீஸ் பற்றி பார்க்கலாம்.
This Week OTT Release Movie List : இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் என்றால், அது விஜய்யின் கோட் திரைப்படம் தான். விஜய் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த மாதம் 5ம் தேதி வெளியான கோட் படத்தை, தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம். நேற்று முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் கோட், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியாகியுள்ளது. கோட் படம் ஓடிடியில் வரும் போது டைரக்டர் வெர்ஷனாக, அதாவது எடிட்டிங் செய்யப்பட்ட காட்சிகளுடன் வெளியாகும் என வெங்கட் பிரபு கூறியிருந்தார். ஆனால், தற்போது அப்படியில்லாமல், தியேட்டரில் வெளியான அதே ரன்னிங் டைம் உடன் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. இந்நிலையில், நெட்பிளிக்ஸில் வெளியான கோட் படத்துக்கு, ஓடிடி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
யோகி பாபு நடித்துள்ள போட் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இம்சை அரசன் 23ம் புலிகேசி, விஜய்யின் புலி ஆகிய படங்கள் மூலம் பிரபலமான சிம்புதேவன், யோகி பாபுவின் போட் படத்தையும் இயக்கியுள்ளார். காமெடி ஜானரில் உருவான இந்தப் படம், ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. அதனைத் தொடர்ந்து தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. அக்.1ம் தேதி அமேசானில் வெளியான இந்தப் படத்துக்கும் ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது.
மலையாளத்தில் ஆனந்தபுரம் டைரீஸ் திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் இந்த வாரம் வெளியானது. தெலுங்கில் 35 மூவி, கலிங்கா, பாலுகனி டாக்கீஸ் படங்கள் ஆஹா தளத்தில் வெளியாகியுள்ளன. அதேபோல், பலே உன்னடே (Bhale Unnade) திரைப்படம் ஈடிவி வின் ஓடிடியில் இந்த வாரம் வெளியானது. இந்தியில், CTRL என்ற த்ரில்லர் ஜானர் மூவி நெட்பிளிக்ஸ் தளத்திலும், கூகி (Kooki) திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்திலும் ஸ்ட்ரீமிங் ஆகின்றன. தி ட்ரைப் (The Tribe) என்ற இந்தி வெப் சீரிஸ் அமேசானிலும் ஸ்ட்ரீமிங் ஆகிறது. அதேபோல், கலர்ஸ் ஆஃப் லவ் ஜீ5 தளத்திலும் வெளியாகிறது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் தி பிளாட்ஃபார்ம் 2 (The Platform 2) என்ற ஸ்பானிஷ் மூவி, It's What Inside திரைப்படம் ஆகியவை வெளியாகியுள்ளன. அதேபோல், Chef's Table NOODLES S1 என்ற சீரிஸும் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. அமேசான் ப்ரைம் தளத்தில் House of Spoils என்ற சூப்பர் நேச்சுரல் ஹாரர் மூவி இந்த வாரம் வெளியாகியுள்ளது. இதுதவிர கடந்த வாரங்களில் வெளியான தங்கலான், டிமான்டி காலனி 2ம் பாகம் போன்ற படங்களும் ஓடிடி ரசிகர்களுக்கு காத்திருக்கின்றன.
What's Your Reaction?