உக்ரைன் சென்ற முதல் இந்திய பிரதமர்... போனதுமே தரமான சம்பவம்...!

உக்ரைன் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு தலைநகரான கீவ்வில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Aug 23, 2024 - 19:51
Aug 24, 2024 - 10:01
 0
உக்ரைன் சென்ற முதல் இந்திய பிரதமர்... போனதுமே தரமான சம்பவம்...!

1991 ஆம் ஆண்டு உருவான உக்ரைன் நாட்டிற்கு இதுவரைக்கும் எந்த இந்திய பிரதமரும் சென்றதில்லை. அண்மையில் போலாந்து, உக்ரைன் நாடுகளுக்கு 3 நாள் பயணமாக சென்ற இந்திய பிரதமர் மோடி, முதல் நாளன்று அந்நாட்டு பிரதமருடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு கிட்டத்தட்ட 10 மணி நேரம் ரயிலில் பயணம் செய்து உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் சென்றடைந்தார். மூன்றாவது முறையாக இந்திய நாட்டின் பிரதமராகியுள்ள நரேந்திர மோடிக்கு, உக்ரைன் அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகள், உக்ரைன் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர். 

இதனையடுத்து, உக்ரைனின் தலைநகரமான கீவ் நகரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் நரேந்திரமோடி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். 

உக்ரைன் சென்றது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், ”கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினேன். காந்தியின் இலட்சியங்கள் உலக அளவில் இருக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன. அவர் காட்டிய வழியை நாம் அனைவரும் பின்பற்றுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

அதன்பிறகு, கீவ் நகரில் அமைந்துள்ள போர் நினைவுக் கூடத்திற்குச் சென்ற பிரதமர் மோடியை, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வரவேற்றார். இருவரும் மாறிமாறி ஆரத்தழுவிக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

இதுதொடர்பாக பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தானும் ஜெலன்ஸ்கியும் கீவ் நகரில் உள்ள தியாகி கண்காட்சியில் அஞ்சலி செலுத்தியதாகவும், மோதல்கள் சிறு குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்துகின்றன... உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு துயரத்தைத் தாங்கும் வலிமையை பெற பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

உக்ரைன் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow