தவெக மாநாட்டில் மாயமான இளைஞர்.. 14 நாட்களாகியும் திரும்பாதால் பரபரப்பு
கடந்த 27ஆம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்ற இளைஞர் மேகநாதன் 14 நாட்களாகியும் இதுவரையிலும் இன்று திரும்பாதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கரையான்காடு பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி புஷ்பநாதன் (64) இவரது மனைவி இறந்துவிட்டார். மகன் மேகநாதன் (32) மற்றும் ஒரு மகள் உள்ளனர் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.
இந்நிலையில் அப்பா மகன் இருவரும் கரையங்காடு பகுதியில் வசித்து வருகின்றனர். மேகநாதன் டிவி மெக்கானிக் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் மேகநாதன் நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஆவார் சமீபத்தில் விஜய் கட்சி தொடங்கியவுடன் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27.ம் தேதி நடைபெற்றது.
மாநாட்டிற்க்காக முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பேருந்தில் மேகநாதன் மற்றும் 34 பேர் மாநாட்டிற்கு சென்றுள்ளனர் மாநாடு முடிந்து 33 பேரும் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், மேகநாதன் மட்டும் வீடு திரும்பவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மேகநாதனின் செல்போனிற்கு தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது.
இதனையடுத்து, தனது மகன் காணவில்லை என அறிந்த தந்தை புஷ்பநாதன் கடந்த 30ஆம் தேதி விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு காணாமல் போன மேகநாதனை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் இது குறித்து புஷ்பநாதன் தெரிவித்த போது, “விஜய் நடத்திய மாநாட்டிற்கு ஆர்வமாக சென்ற எனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது செல்ஃபோனும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து எனது மகனை மீட்டு தர வேண்டும்” என கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
What's Your Reaction?