சினிமா

This Week OTT Release: லப்பர் பந்து மட்டும் மிஸ்ஸிங்... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லப்பர் பந்து திரைப்படம், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவிருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்டை இப்போது பார்க்கலாம்.

This Week OTT Release: லப்பர் பந்து மட்டும் மிஸ்ஸிங்... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்
அக் 18 ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்

சென்னை: திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்களை விட, ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் லப்பர் பந்து திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடித்த லப்பர் பந்து, ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் இந்த வாரம் முதல் சிம்பிளி சவுத் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும் என சொல்லப்பட்டது. 

ஆனால், லப்பர் பந்து படத்துக்கு திரையரங்குகளில் தொடர்ந்து வரவேற்பு இருப்பதால், ஓடிடி ரிலீஸ் தேதி ஓத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லப்பர் பந்து படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஓடிடி ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். அதேபோல், கோழிப்பண்ணை செல்லத்துரை, கடைசி உலகப் போர் படங்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அடுத்த வாரம் தான் ஸ்ட்ரீமிங் என சொல்லப்படுகிறது. இதனால் தமிழில் இந்த வாரம் சொல்லிக்கொள்ளும்படி முக்கியமான படங்கள் எதுவும் ஓடிடியில் வெளியாகவில்லை. அதேநேரம் தமிழில் Snakes And Ladders என்ற வெப் சீரிஸ், அமேசான் ப்ரைம் தரத்தில் இந்த வாரம் ரிலீஸாகிறது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த சீரிஸ், ஓடிடி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

மலையாளத்தில் இந்த வாரம் 1000 பேபிஸ் என்ற வெப் சீரிஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும், Soul Stories என்ற வெப் சீரிஸ் மனோரமா மேக்ஸ் தளங்களிலும் வெளியாகின்றன. தெலுங்கில் காலி என்ற திரைப்படம் ETV Win ஓடிடியில் வெளியாகிறது. கன்னடத்தில் Laughing Buddha திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் இந்த வாரம் முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இந்தியில் ஹுல்லா (Hulla) திரைப்படம் ஹாட்ஸ்டாரிலும், கிரிஸ்பி ரிஷ்டே (krispy Rishtey) திரைப்படம் ஜியோ சினிமாவிலும் ஸ்ட்ரீமிங் ஆகின்றன. 

நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைபர்களுக்கு இந்த வாரம், Sweet Bobby என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸ் ரிலீஸாகிறது. அதேபோல், அவுட்சைட் (Out Side) என்ற பிலிப்பைன்ஸ் மூவியும், Women Of The Hour, Shadow Strays என்ற இந்தோனேஷியன் மூவி, The Man Who Loved UFOs என்ற ஸ்பானிஷ் திரைப்படம் ஆகியவை இந்த வாரம் முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகின்றன. அதேபோல், I Am A Killer வெப் சீரிஸின் சீசன் 5, Bollywood Wives வெப் சீரிஸ் ஆகியவையும் இந்த வாரம் முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகின்றன. அமேசான் ப்ரைம் தளத்தில் Culte என்ற பிரெஞ்சு வெப் சீரிஸ், The Park Maniac என்ற மூவி ஆகியவை இந்த வாரம் முதல் ஸ்ட்ரீமிங் ஆகின்றன.