Leo: லியோவில் விஜய் எடுத்த ரிஸ்க்... மிரட்டும் மேக்கிங் வீடியோ... 2ம் பாகத்தில் சிவகார்த்திகேயன்?
தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் வெளியாகி ஓராண்டுகள் ஆகிவிட்டது. இதனை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.
சென்னை: விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்தாண்டு இதேநாளில் (அக்.19) திரையரங்குகளில் வெளியானது. விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மடோனா செபாஸ்டின், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். மாஸ்டர் வெற்றிக்குப் பின்னர் விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவான லியோ, LCU யூனிவர்ஸிலும் இணைந்தது. இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான லியோ திரைப்படம், இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது.
பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி வரை வசூலித்த லியோ, ஓடிடியிலும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. லியோ க்ளைமேக்ஸில் 2ம் பாகத்திற்கு லீட் வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இதனால் லியோ 2 உருவாகுமா என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் விஜய்யோ இனி சினிமா கிடையாது, அரசியல் தான் எதிர்காலம் என முடிவு செய்துவிட்டார். இதன் காரணமாக லியோ 2 உருவாக வாய்ப்பில்லை என சொல்லப்பட்டது. இந்நிலையில், லியோ ரிலீஸாகி ஓராண்டு ஆகிவிட்டதை முன்னிட்டு ஸ்பெஷலாக வீடியோ வெளியிட்டுள்ளது படக்குழு.
The Chronicles Of Leo என்ற கேப்ஷனில் வெளியான இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. லியோ உருவான விதமும், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கலாட்டாவுமாக இந்த வீடியோ உருவாகியுள்ளது. இதில் விஜய்யின் Fun மொமண்ட்ஸ் அவரது ரசிகர்களுக்கு செம வைப் கொடுத்துள்ளது. முன்னதாக லியோ படத்தை இயக்கியது பற்றி லோகேஷ் கனகராஜ்ஜும் எமோஷனலாக ட்வீட் போட்டிருந்தார். ஒருபக்கம் லியோ மேக்கிங் வீடியோ ட்ரெண்டாகும் நிலையில், இப்படத்தின் 2ம் பாகம் பற்றிய அப்டேட்டும் ஹைப் கொடுத்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய லோகேஷ் கனகராஜ்ஜிடம், சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமையுமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ், “நானும் சிவகார்த்திகேயனும் சீக்கிரமே ஒரு படம் பண்ணுறோம்; ரொம்ப வருஷமாவே அதுக்கான பேச்சு போய்கிட்டுதான் இருக்கு; சரியான நேரம் அமையனும்; அதான் துப்பாக்கி கையில வாங்கிட்டார்-ல” என சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது.
அதாவது கோட் படத்தில் கேமியோவாக நடித்த சிவகார்த்திகேயன், விஜய்யிடம் இருந்து துப்பாக்கி வாங்குவது போல ஒரு காட்சி வரும். மேலும் அது விஜய்யின் இடத்தில் இனி சிவகார்த்திகேயன் என்ற மீனிங்கில் வசனம் இடம்பெற்றிருக்கும். இதனை குறிப்பிட்டே லோகேஷ் கனகராஜ் அப்படி சொன்னதாகவும், இதன்மூலம் சிவகார்த்திகேயன் நடிப்பில் லியோ பார்ட் 2 உருவாகலாம் எனவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் இதுபற்றிய அபிஸியல் அப்டேட்ஸ் இப்போதைக்கு வர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
What's Your Reaction?