அரசியல்

I'm also திராவிட குஞ்சுதான்! தவெக கொள்கையை கேட்டு பயந்துட்டேன்... விஜய்யை கலாய்த்த சீமான்

அண்மையில் வந்த ‘கோட்’ திரைப்படத்தில் வில்லனும் கதாநாயகனும் விஜய்யாகவே இரு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதனால்தான் விஜய் தமிழ் தேசியமும் திராவிடமும் இரண்டும் ஒரே கொள்கை என்று நினைத்து விட்டார்“ என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

I'm also திராவிட குஞ்சுதான்! தவெக கொள்கையை கேட்டு பயந்துட்டேன்... விஜய்யை கலாய்த்த சீமான்
I'm also திராவிட குஞ்சுதான்! தவெக கொள்கையை கேட்டு பயந்துட்டேன்... விஜய்யை கலாய்த்த சீமான்

தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை பெரம்பூரில் நேற்று (நவ. 1) நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உரையாற்றினார். அதில், “தமிழர்களுக்கு எந்த அடையாளமும், பெருமையும், வரலாற்று சுவடும் இருக்கக்கூடாது என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். இன்னும் ஐந்து ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தால் தமிழ்நாடு பெயர் மாற்றப்பட்டு கருணாநிதி நாடு என்று இருக்கும். கழிப்பிடம் மற்றும் குடிப்பகத்திற்கு மட்டுமே கருணாநிதி பெயர் இல்லை. நியாயமாக  கருணாநிதியின் பெயர் குடிப்பகத்தில்தான் இருக்க வேண்டும்.

உலகம் முழுவதிலும் மொழி, இன அடிப்படையிலேயே அரசியல் கட்டமைப்பு உள்ளது. இதை பிரிவினைவாதம் என்று சொன்னால் அதை ஏற்பதா? எதிர்ப்பதா? ஐரோப்பிய நாடுகள், பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள், நார்வே ஆகியவை மொழி வழியிலேயே பிரிந்துள்ளது. இது பிரிவினைவாதமா விடுதலையா? சாதி மதத்தோடு மொழி இனத்தை இணைக்க கூடாது. மொழி இனம் பிரிவினைவாதம் என்று பேசுவது அரை வேக்காட்டுத்தனம். உலக நாடுகள் எங்கு சென்றாலும் உலகில் மூத்த மொழி தமிழ் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். அது எங்கள் நாட்டில் இருப்பது பெருமை என்கிறார். இந்திய மொழிகளின் தன்மையை தமிழில் இருந்து அறியலாம் என்றும் பிரதமர் மோடி பேசுகிறார். தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக தன் உயிர் நீத்த சங்கரலிங்கனாரை திராவிட மடல் அரசு போற்றாதது ஏன்? பேசாதது ஏன்?

விஜய்யின் திராவிடமும் தமிழ் தேசியமும் எனும் கொள்கையால் பயந்துவிட்டேன். அண்மையில் வந்த ‘கோட்’ திரைப்படத்தில் வில்லனும் கதாநாயகனும் விஜய்யாகவே இரு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதனால்தான் விஜய் தமிழ் தேசியமும் திராவிடமும் இரண்டும் ஒரே கொள்கை என்று நினைத்து விட்டார். 75 ஆண்டுகால பவள விழா கொண்டாடும் திமுகவிற்கே திராவிடம் என்றால் என்னவென்று தெரியவில்லை. திராவிடம் என்பது வேறு தமிழ் தேசியம் என்பது வேறு! தமிழருக்கு தமிழ்தேசியமே பொருந்தும். I'm also திராவிட குஞ்சுதான்! இலங்கையில் தமிழர்கள் இறந்து கிடந்தபோது தான் திராவிடம் வேறு என்பது புரிந்தது. தமிழ் தேசியம் திராவிடத்திற்கு நேர் எதிர். இரண்டும் எப்படி ஒன்றாகும்? தமிழ் தேசியம் தமிழ்நாடு பிறந்த நாளை கொண்டாடும். தமிழ்நாடு என்ற பெயர் வைத்ததை திராவிடம் கொண்டாடும்.

திராவிடம் என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியவில்லை. தமிழ் தேசியம் என்றால் என்ன என்றும் இவர்களுக்கு தெரியவில்லை. ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால். சாலையில் ஒன்று அந்தப் பக்கம் நிற்க வேண்டும் அல்லது இந்த பக்கம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி அடித்து சாகத்தான் வேண்டும். நான் பேசுவது சினிமா பஞ்ச் வசனம் இல்லை. நெஞ்சில் இருந்து பேசுகிறேன். எனவே சத்தமாகத்தான் இருக்கும். மாநாட்டில் சில தலைவர்கள் போல் நாம் சத்தமாக பேச வேண்டியது இல்லை! நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் அல்ல வரலாற்றை கற்பிக்க வந்தவன். இனிதான்  நீங்கள் அம்பேத்கரையும் பெரியாரையும் சங்க இலக்கியத்தையும் படிக்க வேண்டும். நாங்கள் அனைத்தையும் படித்துவிட்டு தான் வந்துள்ளோம். தலையாலங்காலத்து பாண்டிய மன்னன் கதை கதையல்ல. அது எங்கள் வரலாறு” என நடிகர் விஜய் தனது மாநாட்டில் பேசியது குறித்து விமர்சித்துள்ளார்.