காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..

சென்னையில், 19 காவல் உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Aug 21, 2024 - 10:55
Aug 21, 2024 - 11:04
 0
காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..
சென்னையில் காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

சென்னை காவல்துறை, மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த உதவி ஆணையர்களை கூண்டோடு இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 08ஆம் தேதி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை பெருநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல, சென்னை தலைமையிட ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உள்ளிட்ட 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

பின்னர் ஜூலை 16ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடியாக மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதேபோல சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார். மேலும், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 8ஆம் தேதி தமிழக காவல்துறையில் ஒரேநாளில் 58 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்தது. முதலில் 24 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து மேலும் 32 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்று 19 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் ஜார்ஜ் பெர்னான்டஸ், ஐசியூடபிள்யூ பிரிவின் உதவி ஆணையராக மாற்றம்.

எழும்பூர் காவல் உதவி ஆணையராக இருந்த மனோஜ் குமார், சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக மாற்றம். 

வடபழனி காவல் உதவி ஆணையராக இருந்த அருள் சந்தோஷ முத்து, சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக மாற்றம். 

எம்கேபி நகர் காவல் உதவி ஆணையராக இருந்த வரதராஜன், சென்னை காவல்துறை நவீனமயமாக்கல் மற்றும் பயிற்சி பிரிவு உதவி ஆணையராக மாற்றம். 

செம்பியம் காவல் உதவி ஆணையராக இருந்த பிரவீன் குமார், சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக மாற்றம்.

சென்னை காவல்துறை நவீனமயமாக்கல் மற்றும் பயிற்சி பிரிவு உதவி ஆணையராக இருந்த செய்யது பாபு, தரமணி காவல் உதவி ஆணையராக மாற்றம். 

சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த அனந்தராமன், வடபழனி காவல் உதவி ஆணையராக மாற்றம். 

சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த சச்சிதானந்தம், எம்கேபி நகர் காவல் உதவி ஆணையராக மாற்றம். 

சென்னை காவல்துறை பயிற்சி பிரிவு உதவி ஆணையராக இருந்த முனியசாமி, அண்ணாநகர் காவல் உதவி ஆணையராக மாற்றம். 

சென்னை காவல் ஆணையரக மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த விஜயராமலு, கிண்டி உதவி ஆணையராக மாற்றம். 

சென்னை காவல் துறை நலன் மற்றும் சமூக காவல் பிரிவு உதவி ஆணையராக இருந்த மேத்யூ டேவிட், சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக மாற்றம்.

சென்னை அண்ணாநகர் காவல் உதவி ஆணையராக இருந்த கிருஷ்ணமூர்த்தி, சென்னை காவல் ஆணையரக மக்கள் தொடர்பு அதிகாரியாக மாற்றம். 

சென்னை துறைமுக காவல் உதவி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த், சென்னை காவல்துறை பயிற்சி பிரிவு உதவி ஆணையராக மாற்றம். 

சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த ராஜ்பால், ராயபுரம் காவல் உதவி ஆணையராக மாற்றம். 

சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த ராஜசேகரன், துறைமுக காவல் உதவி ஆணையராக மாற்றம். 

சென்னை கிண்டி காவல் உதவி ஆணையராக இருந்த சிவா, சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக மாற்றம். 

ராயபுரம் உதவி ஆணையராக இருந்த மகேந்திரன் சென்னை காவல்துறை குற்ற ஆவண காப்பக உதவி ஆணையராக மாற்றம். 

சென்னை காவல்துறை குற்ற ஆவண காப்பக உதவி ஆணையராக இருந்த ஜான் சுந்தர் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக மாற்றம்.

சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக இருந்த செம்பேடு பாபு வளசரவாக்கம் காவல் உதவி ஆணையராக மாற்றம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow