K U M U D A M   N E W S

மருத்துவர்கள் அலட்சியம்.. பறிபோன உயிர்? போராட்டத்தில் இறங்கிய பாமகவினர்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வலிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் ரமேஷ் உயிரிழந்ததாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செவி சாய்க்காத சாம்சங் நிறுவனம்.. சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள்

காஞ்சிபுரம் தேரடி பகுதியில் சாம்சங் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு சமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

சாலை முழுதும் துர்நாற்றம்...கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே உள்ள செட்டிமாரம்பட்டி கிராம மக்கள் தங்களது ஊருக்கு கழிவு நீர் கால்வாய் அமைத்து தரக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"பலமுறை மனு கொடுத்தாச்சு" நடுத்தெருவில் இறங்கிய கிராம மக்கள்

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே ராவத்துநல்லூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி அக்கிராம மக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

”3 மாசமா தண்ணி வரல.. ” காலிக்குடங்களுடன் போராட்டத்தில் குதித்த பெண்கள்

புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் ஊராட்சி தேனீப்பட்டி பகுதியில் 3 மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுட்டனர்.

ஊர் எல்லையை மாற்றக் கோரி போராட்டம் - கைது

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே செங்கீரை ஊராட்சி எல்லை தொடர்பாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளுடன் உடன்பாடு எட்டப்படாததையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்கல... குற்றம்சாட்டிய Y.S. ஷர்மிளா

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து காங்கிரஸ் மாநிலத்தலைவர் YS சர்மிளா நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

Leopard Issue : "இதுக்கு மேல முடியாது.." - உயிர் பயத்தில் வீதிக்கு வந்த மக்கள்.. சேலத்தில் பரபரப்பு

Mettur People Protest To Catch Leopard : மேட்டூர் அருகே சிறுத்தை புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்காத வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறை, காவல்துறை அலுவலர்கள் சிறுத்தை புலியை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

தினம் தினம் ஒரு பஞ்சாயத்து....எப்படி இருந்த பச்சையப்பன் கல்லூரி

பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் சாலை மறியல்.. ஸ்தம்பித்த ECR! புதுச்சேரியில் உச்சக்கட்ட பரபரப்பு

Fishermen Protest in Pondicherry : புதுச்சேரியில் கடற்கரை ஓரம் தூண்டில் முள் வளைவு அமைக்காத்தை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு.. ஒன்று திரண்ட கிராம மக்கள்...

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடி ஊராட்சியை பேரூட்சியாக மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

"எங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை.."போராட்டத்தில் இறங்கிய மக்கள்..எழும்பூரில் பரபரப்பு

எழும்பூர் கண்ணப்பர் திடல் அமைச்சர் உதயநிதி மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் குடியிருப்பு ஒத்துக்கீடு செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார். இந்திய 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

போராட்டத்தை கைவிடாவிட்டால் நடவடிக்கை - சாம்சங் நிறுவனம் எச்சரிக்கை

ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தை கைவிடாவிட்டால் வரும் திங்கள்கிழமை தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஒருவழியாக மமதாவின் வேண்டுகோளை ஏற்ற மருத்துவர்கள்.. 41 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்!

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை சந்தித்து மமதா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் அவரிடம் , கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயலை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; சுகாதார செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

பந்த் எதிரொலியால் பேருந்துகள் நிறுத்தம்.. பயணிகள் அவதி

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் முழு கடையடைப்பு நடைபெறுவதால் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

#JUSTIN || ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மறியல்

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் சாலை மறியல்.

மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் மோதல்.. புதுச்சேரியில் உச்சக்கட்ட பரபரப்பு | Kumudam News 24x7

சதுப்பு நில காடுகளை அழித்து பாண்டி மெரினா விரிவாக்கம்- எதிர்ப்பு தெரிவித்து நடந்த சாலை மறியல் போராட்டத்தில் மோதல்

’பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு’.. திமுக அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

''ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சுரங்கப்பாதை அமைக்க கோரி மக்கள் சாலை மறியல் போராட்டம்

பட்டுக்கோட்டையில் ரயில்வே கேட் பகுதியில் சுங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி 1,000க்கும் மேற்பட்ட மக்கள் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.

Samsung Employees Protest : சாம்சங் ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டம்!

Samsung Employees Protest :ஊதிய உயர்வு, போனஸ் போன்ற பண பலன்கள் வழங்காததை கண்டித்து சாம்சங் ஊழியர்கள் போராட்டம்.

மருத்துவ மாணவி படுகொலை; மருத்துவர்கள் தொடர் போராட்டம்!

கொல்கத்தாவில் மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டம் - தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தொடக்க கல்வித்துறை கூட்டு நடவடிக்கை குழு நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக 30% பேர் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளனர். 69.4% ஆசிரியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது மாணவி தாக்குதல்... போராட்டத்தில் குதித்த ஓட்டுநர், நடத்துநர்கள்

சென்னை குரோம்பேட்டையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை சட்டக்கல்லூரி மாணவி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஓட்டுநர், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பழநியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.. போராட்டத்தில் குவித்த வியாபாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரப் பகுதியில் ஆக்கிரமித்திருந்த கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இந்நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் கடைகள் அகற்றப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாம்சங் தொழிற்சங்க ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்