கொடநாடு வழக்கு : இபிஎஸ்-க்கு ட்விஸ்ட் வைத்த உயர்நீதிமன்றம்
கொடநாடு வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொடநாடு வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாங்கள் கூட்டணி குறித்து மற்றக் கட்சிகளுக்கு அழைத்து விடுத்துள்ளோம் என்றும் பாஜக கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே உறுதி தெரிவித்து விட்டேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஒரு நிலையில்லா மனிதர் என்றும் அவரை பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து மௌனம் கலைத்த எடப்பாடியின் பேச்சு பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், எடப்பாடியின் கையை மீறி அதிமுக மாஜிக்கள் செல்வதாக வெளியாகி இருக்கும் தகவல்தான் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தின் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது... யார் யார் அந்த மாஜிக்கள்?
திமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்பதை மொட்டை அறிக்கை வெளியிட்ட பேர்வழிகள் ஒப்புக்கொண்டு உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை விஜய் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யார் ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமியுடன் விவாதத்திற்கு தயார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2026 தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு நடந்தே ஆக வேண்டும் என்று அதிமுக மாஜிக்கள் தீவிரமாக இருக்க, அதற்கு ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
நீர்வளத் துறை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு சட்டமன்றத்தில் பதில் அளிக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவி ஏற்பார் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான வாதங்களுக்காக, அவதூறு வழக்கு விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைப்பு
திமுக அரசின் அலட்சியத்தால் 2 பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு நாளை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ‘தமிழ்நாடு நாள்’ என அறிவிக்கப்பட்ட நாள் இன்று; தமிழ்நாடு உருவாகக் காரணமாக இருந்த அனைத்து தியாக உள்ளங்களையும் இந்நன்னாளில் போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை தான் எதிர்-பார்க்கிறார் ஆனால் அது நடக்காது இபிஎஸ்-ஐ-சைலண்டாக-தாக்கிய-திருமா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின் மூத்த அமைச்சர்களை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமியிடம் முதலமைச்சர் பதவி சென்ற கதை மக்களுக்கு தெரியும். ஆனால் அதிமுக நிலைமை திமுக எப்போதும் ஏற்படாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஆளுக்கொரு ஆண்டுவிழா, போட்டி, பொதுக்குழு… சீனியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ரெட்அலர்ட்… என்ன நடக்கிறது அதிமுகவில்? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…
நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும் என்றும் வரலாற்றில் ‘ஆரியம் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று தான் உள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மழை ஆரம்பித்து 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கால்கள் எங்கேயாவது தரையில் பட்டுள்ளதா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.