Duraimurugan VS Rajinikanth: 'பல்லு போன வயசான நடிகர்கள்'.. ரஜினியை கலாய்த்த துரைமுருகன்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
''ரஜினிக்கு வயதானாலும் அவர் நடித்த படங்கள் அனைத்தும் 100 கோடிக்கு மேல் வசூலித்து அனைத்து தரப்புக்கும் லாபத்தை கொடுத்து வருகிறது. மூத்த நடிகர்கள் இருந்தாலும், சினிமாவில் இளம் நடிகர்கள் பலர் இன்று கோலோச்சி வருகின்றனர். ஆனால் அரசியல் கட்சிகளில், குறிப்பாக திமுகவில் அப்படியா உள்ளது? துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களால்தான் திமுகவில் ஏராளமான அடிமட்ட தொண்டர்கள், இளைஞர்கள் புதிய பதவிக்கு வர முடியாமல் உள்ளனர்'' என்று அமைச்சர் துரைமுருகனுக்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.