விசிக மது ஒழிப்பு மாநாடு: "வேடிக்கையான ஒன்று.." என செல்லூர் ராஜூ விமர்சனம்
மது ஒழிப்பு மாநாட்டை திமுகவை அழைத்து நடத்துவது வேடிக்கையான ஒன்று என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
மது ஒழிப்பு மாநாட்டை திமுகவை அழைத்து நடத்துவது வேடிக்கையான ஒன்று என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
திமுக-வை உட்கார வைத்து எப்படி மாநாடு ஒழிப்பை பேசுவீர்கள்? நாங்கள் பேசுகிறோமா? இல்லையா? என்பதை மாநாட்டின்போது பாருங்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்து சென்று மது ஒழிப்பு மாநாடு நடத்துவது என்பது, வேடிக்கையாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
Edappadi Palanisamy About Vijay : இதனை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். விஜய் சாரிடம் கேளுங்கள் என்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கலைஞரை வைத்துக்கொண்டே ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து நாங்கள் பேசியுள்ளோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகத்தை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தேசியம் பக்கம் வந்தால் கூட பரந்த நிலைப்பாட்டோடு அழைத்துச் செல்வோம். ஆனால் திராவிட சாயத்தை பூசி கொண்டால் அவ்வளவுதான் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
EVKS Elangovan About TVK Vijay : கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே ஆட்சியை பிடிப்போம் என சொல்லி வரும் நிலையில், திருமாவளவன் சொல்வதில் தவறில்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் எதிர்பார்த்த முதலீடு வராததை திசை திருப்பவே மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகத்தை மு.க.ஸ்டாலினும் திருமாவளவனும் அரங்கேற்றி வருவதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் மொட்டை அடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து எல்.முருகனிடம் கேட்டபோது, ‘இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை முறையாக எடுப்போம்’என்றார்.
பாமகவை சாதி கட்சி என்பது போன்று பேசுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாமகவை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இடம் பெற திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார் என்றும் பாஜக, பாமகவை பற்றி பேச திருமாவளவனிற்கு யோக்கியதை கிடையாது என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்பது போன்று பேசியிருப்பது, திமுகவிற்கு பயத்தை கொடுத்து இருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எல்கேஜி படித்திருந்தாலும், சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
''நானும் சரி, திருமாவளவனும் சரி ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றுதான் கட்சி நடத்துகிறோம். திருமாவளவனும் தன்னுடைய ஆட்சி வர வேண்டும் என்றுதான் விரும்புவாரே தவிர, திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்ப மாட்டார். ஆகவே திருமாவளவன் பேசியது சரி'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
”அதெல்லாம் முதல்வரின் முடிவு.. எங்களது பணியல்ல” - திருமா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு
‘ஆட்சியிலும், அதிகாரத்தில் பங்கு வேண்டும்’ என்று திருமாவளவன் பேசும் வீடியோ, ட்விட்டர் பக்கத்தில் 3ஆவது முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டதால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தை பாராட்டுகிறேன் என்றும் இனிவரும் காலங்களில் தன்னுடைய நிலைப்பாட்டில் திருமாவளவன் உறுதியாக இருக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை புதூர் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினரால் அகற்றப்பட்ட விசிக கொடிக்கம்பம் திரும்ப ஒப்படைப்பு.
தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்கு தான் மாநாட்டை நடத்துகிறோம் என்றும் தேர்தலுக்காக நடத்தினால், இதை விட அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மாநில சுயாட்சியை இபிஎஸ் விலக்கி கொண்டால் விசிக அதிமுக கூட்டணி செல்லுமா? மருது அழகுராஜ் சொல்வது என்ன?
அமைச்சரவையில் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோவை தனது X தளத்தில் பகிர்ந்த திருமாவளவன். வீடியோ தொடர்பாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் வீடியோ நீக்கப்பட்டது
''ஆட்சியிலும் பங்கு ,அதிகாரத்திலும் பங்கு. கடைசி மக்களுக்கு ஜனநாயகம். எளிய மக்களுக்கு அதிகாரம் இதையெல்லாம் சொல்கின்ற கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி’’ என்று திருமாவளவன் கூறியிருந்தார்.
Thirumavalavan Old Video Controversy : திமுக கூட்டணியில் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக வலம் வருவது தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி. வெறும் கூட்டணி என்பதை தாண்டி கொள்கைரீதியாகவும் திமுக-விசிக இடையே வலுவான பிணைப்பு உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்கள் திமுகவிடம் இருந்து விசிக பிரிகிறதா? என்ற கேள்வியை அனைவரது மனதிலும் எழுப்பியுள்ளது.
நகர்ப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அரசுகள் கிராமப்புறங்களை கண்டு கொள்வதில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.